அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என விமர்சிக்க வேண்டாம்; ஆட்டுக்குட்டிக்கு ஒரு மரியாதை உண்டு - சினேகன் விமர்சனம்

By Velmurugan s  |  First Published Apr 15, 2024, 12:00 PM IST

பாஜக மாநில தலைவரை ஆட்டுக்குட்டி அண்ணாமலை என யாரும் விமர்சிக்கக் கூடாது என கேட்டுக் கொண்ட சினேகன், ஆட்டுக்குட்டிக்கென ஒரு மரியாதை உண்டு அதனை யாரும் அசிங்கப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.


கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். கமல்ஹாசன் வருவதற்கு முன்னதாக பொதுமக்களிடையே பேசிய பாடலாசிரியர் சினேகன் அண்ணாமலை குறித்து பேசத் தொடங்கியதும் "ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி" என தொண்டர்கள் கோஷம் எழுப்பத் தொடங்கினர்.

Tap to resize

Latest Videos

அப்போது பாடலாசிரியர் சினேகன், தயவு செய்து இனி ஆட்டுக்குட்டி அண்ணாமலை என பாஜக தலைவர் அண்ணாமலையை அழைக்க வேண்டாம். ஆட்டுக்குட்டிக்கு ஒரு மரியாதை இருக்கு அதை கெடுக்க வேண்டாம். பச்சை இலையை போட்டால் பண்போடு பின்னால் வரும், ஆட்டுக்குட்டி கொண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணாது. குட்டிகளுக்கு சரியாக பால் கொடுக்கும். யார் எஜமான் என்பது ஆட்டுக்குட்டிக்கு தெரியும். அடுத்தவர்களின் வீட்டை தாவி பார்க்காது. அடுத்தவர்களை போட்டுக் கொடுக்காது. 

ஆகையினால் இன்று முதல் அண்ணன் அண்ணாமலை அவர்களை ஆட்டுக்குட்டி அண்ணாமலை என சொல்வதை நாங்கள் விட்டுவிடுகிறோம். ஆட்டுக்குட்டி மீது எங்களுக்கு பெரிய மதிப்பு உண்டு எனவும் பேசினார்.

Annamalai: நான் பிரசாரமே பண்ணல; அதிகாரிகளுடனான காரசார வாக்குவாதம் குறித்து அண்ணாமலை விளக்கம்

தனிமனித விமர்சனம் என்பது அரசியலில் இருக்கக் கூடாது என்று எங்கள் மக்கள் நீதி மையத்தின் தலைவர் சொல்லி இருக்கிறார். நான்கு நாட்களுக்கு முன்பு அண்ணாமலை அவர்கள் எங்கள் தலைவர் கமல்ஹாசனுக்கு மூளை இருக்கிறதா என பரிசோதனை செய்யுமாறு விமர்சனம் செய்துள்ளார். ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றாலோ, அந்த பொருள் மீது ஆசை இருந்தாலோ தான் அது குறித்து தொடர்ச்சியாக நாம் பேசுவோம். உங்களுக்கு மூளை இல்லை என்பதற்காக எங்கள் தலைவரைப் பற்றி சொன்னீர்களா? அல்லது நீங்கள் படித்த 20 ஆயிரம் புத்தகத்தில் மூளை குறித்து ஒரு புத்தகம் கூட இல்லையா?

மூளையைப் பற்றி பேச மூளை இருக்க வேண்டும் இல்லையா? யார் யாரைப் பற்றி பேச வேண்டும் என்பதற்கு ஒரு அருகதை வேண்டாமா? அண்ணாமலை சில நாட்களுக்கு முன்பு கோவையில் வெப்பம் அதிகரிக்க திமுக தான் காரணம் என பேசி உள்ளார். அண்ணாமலையின் மூளையை பார்த்து நாங்கள் வியந்து போகிறோம். அரசியல் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு பண்பாட்டுக்கு கட்டுப்பட்டு நியாயமான முறையில் நாங்கள் விமர்சனம் செய்கிறோம்.

கச்சத்தீவு மீட்பு... ஒரு வார்த்தை கூட இடம்பெறாத பாஜக தேர்தல் அறிக்கை.. தமிழக கூட்டணி கட்சிகள் அதிருப்தி

இன்னொருமுறை எங்கள் தலைவரைப் பற்றியோ வேறு யாரைப் பற்றியோ தரைக்குறைவாக விமர்சனம் செய்தீர்கள் என்றால் நாங்கள் என்ன விமர்சனம் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்கிறீர்கள். அண்ணாமலை அவர்களே நீங்கள் மூளை இல்லை என சொன்ன தலைவரை தான் உலகநாயகன் என கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மண்ணில் 20 வருடங்கள் கழித்து கலை இலக்கிய பண்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே யோசிக்கின்ற மிகப்பெரிய ஆற்றல் உடைய தலைவர் எங்கள் தலைவர்.

பாஜகவின் வரலாறு தெரியாமல், யோசித்துப் பார்க்காமல் அண்ணாமலை காக்கிச்சட்டையை கழட்டி விட்டு காக்கி சட்டையை போட்டுள்ளார். இன்னும் காக்கி சட்டை போட்ட எண்ணத்திலேயே செயல்படுகிறார் எனவும் ஆவேசமாக பேசினார்.

click me!