அரசு மதுபான கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு... கோவையில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

Published : Jan 02, 2023, 11:53 PM IST
அரசு மதுபான கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு... கோவையில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

சுருக்கம்

கோவை அருகே அரசு மதுபான கடை மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை அருகே அரசு மதுபான கடை மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள வெள்ளிக்கு பம் பாளையத்தில் கடை எண்1811 கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் சூப்பர்வைசராக விஜய் ஆனந்த் என்பவரும் சேல்ஸ் மேன்களாக கரியபெட்டன், குனசேகரன் ஆகியோரும் பணியாற்றி வந்தனர்.

இதையும் படிங்க: ரூ.1,000 வேணுமா.? திமுக மாதிரி நாம கொள்ளையடிக்கணும்.. சர்ச்சையை கிளப்பிய ப.சிதம்பரம்

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் கடையில் இருந்த ஊழியர்களிடம் கடையின் எண்ணை கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த இரண்டு பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசி எரிந்துள்ளனர். இதனால் அங்கு தீ பற்றியது. இதை அடுத்து கடையில் இருந்த ஏராளமான மதுபானங்கள் தீக்கிரையாகின.

இதையும் படிங்க: ஜன.4 அன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்... பொது சுகாதாரத்துறை தகவல்!!

அதுனுடன் பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியும் தீபற்றி எரிந்ததில் அதிலிருந்த பணமு தீயில் கருகின. இதனிடையே கடைக்குள் இருந்த மூவரும் வெளியில் ஓடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுக்குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தடயங்களையும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும்  கைப்பற்றி விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?