கோவையில் புத்தாண்டை முன்னிட்டு ஐயப்பன் வீதியுலா; திருவிளக்கேந்தி மங்கையர்கள் வழிபாடு

By Velmurugan s  |  First Published Jan 1, 2023, 9:38 AM IST

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவையில் மேலதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வான வேடிக்கையுடன், பக்தர்கள் கையில் விளக்கேந்தி நடனமாடியபடி ஐயப்பன் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.


ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோவில்கள், கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக கோவை ஆர்எஸ்புரம் பகுதியில் புத்தாண்டையொட்டி மக்கள் நல்ல ஆரோக்கியம் பெற வேண்டி அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் ஐயப்ப தேச விளக்கு தேரோட்டம் திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Latest Videos

undefined

திருவீதியுலாவில் அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமியின் ரதத்தின் முன்பாக நாதஸ்வரம், உடுக்குப்பாட்டு, தாலபொலி, சிங்காரி மேளம், தையம், பூக்காவடியுடன் பக்தர்கள் கையில் விளக்கை ஏந்தி நடனமாடியபடி ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஆர்எஸ்புரம், லாலிரோடு பெரிய மாரியம்மன் கோவிலின் முன்பாக பட்டாசுகள், வான வேடிக்கையுடன் துவங்கிய திருவீதி உலா பிஎம்சி காலனி வரை சென்று முடிவடைந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

ஆவின் பால் விலை மீண்டும் உயர்வா.? 2 ரூபாய் உயர்த்தி பாக்கெட்டில் அச்சடிப்பு- விளக்கம் அளித்த ஆவின் நிர்வாகம்

click me!