கோவையில் பல்வேறுகட்ட போராட்டங்களுக்கு பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

By Velmurugan s  |  First Published Dec 29, 2022, 2:48 PM IST

வருகின்ற ஜனவரி மாதம் முதல் ஒப்பந்த தூய்மைபணியாளர்களுக்கு 648.33 ஊதிய உயர்வு வழங்கி கோவை மாநகராட்சி சிறப்பு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், ஊதியத்தை உயர்த்தியது கோவை மாநகராட்சி.


கோயம்புத்தூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று கூடியது கூட்டத்தில் கோவை மேயர் கல்பனா கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் கவுன்சிலர்கள்   பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி கோவை மாநகராட்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியத்தை  721 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், தூய்மை பணிகளை அவுட்சோர்சிங் செய்யும் அரசாணையை கைவிட வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர். 

Latest Videos

undefined

சீனாவில் இருந்து கோவை வழியாக சேலம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு

இது தொடர்பாக பலக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதன் தீர்வாக இன்று நடந்த மாமன்ற  கூட்டத்தில் சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் தமிழக மாநகராட்சியிலும் செயல்படுத்தும் வண்ணமாக இம்மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்கனவே அவர்கள் பெற்று வரும் தினக்கூலி தொகையினை PWD 2022-23 நிர்ணயம் செய்த தொகையை அடிப்படையாகக் கொண்டு சேமநலநிதி மற்றும் ஊழியர்களின் மாநில காப்பீடுத் தொகை சேர்த்து ரூ.648.33/-ஐ தூய்மைப்பணியாளர்களின் நலன் கருதி 1 ஜனவரி 2023 முதல் உயர்த்தி வழங்கிட சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

கோவை மாநகராட்சியின் இந்த அறிவிப்புக்கு மாவட்ட துப்பரவு பணியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் உதயநிதியின் செயல்பாடுகளை அனைவரும் பாராட்டுகின்றனர் - முதல்வர் பெருமிதம்
 

 

click me!