கோவை கார் வெடிப்பு விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் மேலும் 2 பேரை கைது செய்துள்ளனர்.
கோவை கார் வெடிப்பு விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் மேலும் 2 பேரை கைது செய்துள்ளனர். கோவையில் கடந்த அக்.23 ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஜமீசா முபின் என்பவர் உயிரிழந்தார். இது தீவிரவாத தாக்குதல் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான், முகமது தவுபீக், பெரோஸ்கான், உமர் பாரூக் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.
இதையும் படிங்க: திருச்சி மாவட்டத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை... முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடு!!
தற்பொழுது இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் கோவையை சேர்ந்த சேக் இதயத்துல்லா மற்றும் சனோபர் அலி என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: முடிசூட்டிவிட்டார் முதல்வர்; இவர்கள் என்ன ராஜபரம்பரையா? ஸ்டாலினை கலாய்த்த எடப்பாடி
2 பேரை கைது செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கோவையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைதான 9 பேரில் பெரோஸ் கான், உமர் பாரூக், முஹம்மது அசாருதீன், அப்சர் கான் மற்றும் பெரோஸ் ஆகிய 5 பேரிடம் தனித்தனியாகவும் மொத்தமாகவும் விசாரணை மேற்கொண்டதோடு அவர்கள் கொடுக்கும் வாக்குமூலங்களை கேமரா மூலம் பதிவு செய்து வருகின்றனர்.