கார்த்திகை தீபத் திருநாளையொட்டி பேரூர் படித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் அசத்தியுள்ளனர்.
கார்த்திகை தீபத் திருநாளையொட்டி பேரூர் படித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் அசத்தியுள்ளனர். கார்த்திகை தீப திருநாளையொட்டி இன்று திருவண்ணாமலை உட்பட அனைத்து கோவில்கள் மற்றும் இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட்... டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி!!
அந்த வகையில் கோவையின் முக்கிய ஆறாக விளங்கும் நொய்யல் ஆற்றின் படித்துறையில் நொய்யல் என்ற எழுத்து வடிவில் தீபங்கள் ஏற்றப்பட்டன. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இந்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. இது குறித்து பேசிய கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், இந்த நொய்யல் ஆறு மிக முக்கியமான ஆறாக விளங்குகிறது.
இதையும் படிங்க: 196 நாடுகளின் தேசிய கீதம் பாடிய 12 வயது சிறுமி… புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேரில் வாழ்த்து!!
அடுத்த தலைமுறையினருக்கு இந்த ஆறு மிக முக்கியமானது. ஆறுகளை வெளிப்படும் முறைகள் பழங்காலம் தொட்டே இருந்து வருவதால் கார்த்திகை தீபத்திருநாள் ஆன இன்று பேரூர் படித்துறையில் சுமராயிரத்துக்கும் மேற்பட்ட கார்த்திகை தீப விளக்குகளை ஏற்றி நொய்யல் ஆற்றை வழிபட்டோம் என்று தெரிவித்தார்.