அன்னூரில் தொழில் பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து புளியகுளம் விநாயகர் கோவிலில் மனு அளிக்க சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நடைபயணம் மேற்கொண்டனர்.
அன்னூரில் தொழில் பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து புளியகுளம் விநாயகர் கோவிலில் மனு அளிக்க சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நடைபயணம் மேற்கொண்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் வாயிலாக சிட்கோ தொழில் பேட்டை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 28,000 சத்துணவு மையங்களை அரசு மூடுகிறதா ? கிடையவே கிடையாது.! எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலடி
undefined
இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். மேலும் கோவை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்து மனு அளித்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அன்னூர் சிட்கோ அமைப்பதற்காக 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து தொழில் பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நமது நிலம் நமதே என்ற பெயரில் குழு ஒன்றை தொடங்கி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம்... ஜி20 ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
மேலும் அரசின் கவனத்தை ஈர்க்க கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைந்து குடும்பத்துடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அப்போது கோவை மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் கோவையில் உள்ள புளியகுளம் விநாயகர் கோவிலில் மனு கொடுத்து வழிபாடு செய்யும் நூதன போராட்டத்தை அன்னூரில் இருந்து 40 கிலோ மீட்டர்கள் நடை பயணமாக சென்று விவசாயிகள் முன்னெடுக்கின்றனர். இதற்காக 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் அன்னூரில் இருந்து நடைபயணமாக புறப்பட்டு சென்றனர். புலியகுளம் விநாயகர் கோவில் வந்தடைந்த விவசாயிகள், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, விநாயகரிடம் மனு அளித்து வழிபாடு நடத்தினர்.