நோயை பரப்பும் இடமாக மாறும் கோவை அரசு மருத்துவமனை; பொதுமக்கள் அதிர்ச்சி

By Velmurugan s  |  First Published Mar 16, 2023, 1:13 PM IST

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேங்கியுள்ள கழிவு நீரால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ள நோயாளிகள், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் வெளி நோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோவை மட்டுமல்லாமல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகளும் இங்கு வந்து  சிகிச்சை பெற்று செல்வது வழக்கம். 

மழை காலங்களில் குளம் போல் தேங்கி இருக்கும் கழிவு நீரால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே சிகிச்சை பெற்று செல்கின்றனர். அந்த நீரை நிரந்தரமாக கழிவுநீர் சாக்கடை மூலம் வெளியேற்ற அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  இந்நிலையில் இன்று கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவு நீர் தொட்டி நிரம்பி அப்பகுதியில் குளம் போல் தேங்கி உள்ளது.  

Latest Videos

undefined

தர்மபுரியில் கோர விபத்து: தரைமட்டமான பட்டாசு குடோன்; 2 பேர் உடல் சிதைந்து பலி

உடனடியாக கழிவு நீரை வெளியேற்றி அப்பகுதியை தூய்மைப்படுத்த வேண்டும். இல்லை என்றால் நோய்க்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு நோயை உருவாக்கும் மருத்துவமனையாக மாறிவிடும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்ஸ்டா காதல் மூலம் 13 வயது சிறுமியை கற்பழித்த 17வயது சிறுவன்

click me!