ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா தமன்னா கைது

Published : Mar 15, 2023, 04:06 PM IST
ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா தமன்னா கைது

சுருக்கம்

கோவையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்பிடித்தவாறு பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட பெண்ணை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அண்மையில் சத்திய பாண்டியன் என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டு, அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். மறுநாளே நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவர் பட்டப்பகலில் வெட்டிகொலை செய்யப்பட்டார். முன் பகை காரணமாக கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் நடைபெற்ற கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து மாநகர காவல் துறையினர் ரவுடிகளை கண்காணித்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

தற்போது வரை சுமார் 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சமூக வலைதளங்களையும் சைபர் கிரைம் காவல் துறையினர் உண்ணிப்பாக கவனித்து வருகின்றனர். இந்நிலையில் இளம் பெண் ஒருவர் “பிரண்ட்ஸ் கால் மி தமன்னா” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். அதில்  புகைப்பிடித்தவாறு பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் விடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். 

அந்த வீடியோவில் “எதிரி போட நினைத்தால், அவனை போடும் ஓடுனா கால வெட்டுவோம்” என்ற வன்முறையை தூண்டும் வகையிலான பாடலுடன் ரீல்ஸ் செய்திருந்தார். மேலும் இந்த பெண் அண்மையில் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவரை கொலை செய்ய நபர்களுடன் இன்ஸ்டாவில் நண்பராக உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் காட்டு யானை தாக்கி எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி

விசாரணையில் இந்தப் பெண்  விருதுநகரை மாவட்டத்தைச் சேர்ந்த வினோதினி என்பது தெரியவந்துள்ளது.  இந்நிலையில் மாநகர காவல் துறையினர் வினோதினி மீது ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருபுறம் காவல் துறையினர் தேடிக் கொண்டிருந்தாலும் கணவருடன் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் storyகளை அவர் பகிர்ந்து வந்தார். 

பரோட்டா சாப்பிட்டு படுத்த இன்ஜினியர் உயிரிழப்பு; பரோட்டா பிரியர்கள் அதிர்ச்சி

இந்த நிலையில் நேற்று அவர் வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஆயுதங்களுடன் தான் ரீல் செய்த வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த வீடியோ எனவும், trending கிற்காக செய்த வீடியோக்கள் எனவும், தற்போது தான் தனது கனவுகளுடன் ஆறு மாதம் கர்ப்பிணியாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதிலேயே தான் வந்தால் மட்டுமே தனது நட்பு வட்டாரத்தைச் சேர்ந்த சிலரை விடுவிப்பேன் என காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளதாகவும் கூறி அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Coimbatore Top 5 Tourist Places: ஊட்டி, கொடைக்கானல் கூட்ட நெரிசலால் கவலையா? கோவையில் குளு குளுவென சுற்றிப்பார்க்க 5 சூப்பர் இடங்கள் இதோ!
ஊட்டியை விடுங்க.. கோவையில் கட்டாயம் பார்க்க வேண்டிய குளு குளுவென இருக்கும் 10 இடங்கள்!