கோவையில் நடந்த மத்திய அரசு தேர்வில் ஆள் மாறாட்டம்; கையும் களவுமாக சிக்கிய வடமாநில இளைஞர்கள்

By Velmurugan sFirst Published Mar 14, 2023, 5:37 PM IST
Highlights

அதிகாரிகள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்கும்போது அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விழி பிதுங்கி நின்றனர். இதையடுத்து அவர்கள் நான்கு பேரும் கையும் களவுமாக பிடிபட்டனர். 

கோவை ஆர்.எஸ். புரத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு மரங்கள், செடிகள்,  மர இனங்களை பெருக்குவது குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. அதாவது, தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்ப வளரும் செடிகள், பூச்சிகள் தாக்குதலில் இருந்து செடிகளை காப்பாற்றுவது, பூச்சிகளை கண்டறிதல்  உட்பட பல்வேறு  ஆராய்ச்சிகளை இங்குள்ள விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர். 

மேலும் இந்திய வனப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மரங்களின் தன்மையை கண்டறியும் வகையில் இங்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அலுவலகத்தில் காலியாக உள்ள பல்திறன் பணியாளர்களுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தேர்வில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் தேர்வு எழுதியவர்களில் 50க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் சான்றிதழ்கள் சரி பார்த்தபோது பிப்ரவரியில் நடைபெற்ற தேர்வில் 4 பேர் ஆள் மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வு எழுத வந்தவர்களின் புகைப்படம் மற்றும் கைரேகை ஆகியவை பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று இந்த பணிக்கான நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரி பார்ப்பின் போது, தேர்வு எழுதிய நான்கு பேரின் புகைப்படம் மற்றும் கை ரேகை ஆகியவை மாறுபட்டு இருந்தது தெரியவந்தது.

சாலையோரத்தில் கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் தமிழக இளைஞர்கள்; அதிர்ச்சி சம்பவம்

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள்  நான்கு பேரையும்  ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் கூறினர். ஆனால், அவர்களால் பேசவும் முடியவில்லை, எழுதவும் முடியவில்லை.

மாணவி அனிதா கலையரங்கத்துடன் கூடிய புதிய மருத்துவமனை; அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

ஆனால் தேர்வில் இவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்ததால், இவர்கள் 4 பேரும் ஆள் மாறாட்டம் செய்து இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனர் குனிக்கண்ணன் இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஹரியானா மாநிலத்தை சார்ந்த அமித்குமார் 30, அமித்குமார் 26, அமித் 23, சுலேமான் 25 ஆகிய 4 பேர்  மீதும் வழக்கு பதிவு செய்த சாய்பாபா காலனி காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!