கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.350 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முன்னோடி வங்கி மேலாளர் கவுசல்யா தேவி தெரிவித்துள்ளார்.
கோவை ரயில்நிலையம் எதிரே உள்ள கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில், முன்னோடி வங்கிகள் சார்பில் மாணவர்களுக்கான ஒரு நாள் சிறப்பு கல்விக் கடன் முகாம் நடைபெற்றது. இதில் கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகள் கலந்து கொண்டு, மாணவர்களிடம் கல்வி கடன் விண்ணப்பங்களை பெற்றனர். இந்த சிறப்பு கல்வி கடன் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார்.
முகாம் குறித்து பேசிய வங்கி அதிகாரி, கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.350 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார். நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.180 கோடி கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும், கல்வி கடன் கோரி விண்ணப்பித்து தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
மார்ச் மாதத்திலேயே துவங்கியுள்ள இந்த கல்வி கடன் சிறப்பு முகாம்களில் மாணவர்கள் நேரடியாக கலந்து கொள்ளாவிட்டாலும், பெற்றோர்கள் விண்ணப்பங்களை பெற்று விண்ணபிக்கலாம் என தெரிவித்தார். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் இலக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மேலும் கல்வி கடன் வழங்கும் இலக்கு அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், வெளிநாடுகளில் கல்வி பயில ரூ.30 லட்சம் முதல் ரூ50 லட்சம் வரை கடன் வழங்க உள்ளதாகவும், ஆண்கள் 11.25 சதவீதம் பெண்களுக்கு 10.75 சதவீதம் என்ற விகிதத்தில் கடன் வழங்க படுகிறது. இந்த கல்வி கடன் முகாம் மூலம் ஏராளமான மாணவர்களும் பயன்பெறுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மாணவி அனிதா கலையரங்கத்துடன் புதிய மருத்துவமனை; அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்