கோவையில் கல்லூரி மாணவி கடத்தல்; கார் ஓட்டுநர் போக்சோவில் கைது

Published : Mar 13, 2023, 06:04 PM IST
கோவையில் கல்லூரி மாணவி கடத்தல்; கார் ஓட்டுநர் போக்சோவில் கைது

சுருக்கம்

கோவை மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த 17 வயது மாணவி காணாமல் போன வழக்கில் கார் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த 17 வயது மாணவி கோவை கோவில்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து வெளியே சென்ற மாணவி கல்லூரிக்கு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் கோவில்பாளையம் காவல்நிலையத்தில்  புகார் அளித்தனர். 

புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் ஒரு பகுதியாக மாணவியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் இறுதியாக மாணவிடம் பேசியது சாத்தூரைச் சேர்ந்த ஓட்டுநர் ஞான பிரகாசம் என்பதும் அவர்கள் இருவரும் ராமேஸ்வரம் பகுதியில் இருப்பதும் தெரியவந்தது. 

இளம் பெண்ணுக்கு கடன் கொடுத்து உதவுவது போல் பாலியல் தொல்லை: விஏஓ கைது

இதனையடுத்து ராமேஸ்வரம் சென்ற  கோவில்பாளையம் காவல்துறையினர் மாணவியை மீட்டதுடன் ஓட்டுநர் ஞான பிரகாசத்தை கைது செய்தனர். மாணவிக்கு 18 வயது பூர்த்தி அடையாத காரணத்தினால், ஓட்டுநர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தீ குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?