கோவையில் பிரபல தனியார் மருத்துவமனை வளாகத்தில் திருட்டில் ஈடுபட்ட நபர் அடித்து கொலை

By Velmurugan s  |  First Published May 28, 2024, 10:58 PM IST

கோவையில் பிரபல தனியார் மருத்துவமனை வளாகத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயன்றதாகக் கூறி ஒருவரை மருத்துவமனை பணியாளர்கள் தாக்கிய நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் மணி(எ) ராஜா. இவரது மனைவி சுகன்யா. இவருக்கு பள்ளி செல்கின்ற வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ராஜா நேற்று அவினாசி சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அங்குள்ள கம்பிகளை திருட முயற்சித்தாகக் கூறப்படுகிறது. 

இதனால் அங்கு பணியில் இருந்த மருத்துவமனை பாதுகாவலர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரை அடித்தாகக் கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த மணிக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பீளமேடு காவல்துறையினர் விசாரணையை துவக்கி உள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

அண்ணன், அண்ணனின் நண்பன், டெய்லர்; சென்னையில் சிறுமியை குறிவைத்து வேட்டையாடிய கொடூரம்

இந்நிலையில் ராஜாவின் குடும்பத்தினர் பீளமேடு காவல் நிலையத்திற்கு வந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தினர் ராஜாவை கொலை செய்து விட்டதாகவும், மருத்துவமனை மீதும், ராஜாவை தாக்கியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து பேசிய ராஜாவின் மனைவி சுகன்யா அம்மருத்துமனைக்கு சிகிச்சைக்காக செல்வதாக கூறிவிட்டு சென்றதாகவும், ஆனால் மருத்துவமனையில் இருந்தவர்கள் எதற்காக இந்த வழியில் வந்தாய் என்று எனது கணவரை கடுமையாக தாக்கிவிட்டதாக தெரிவித்தார். 

தமிழகத்தின் நீராதார உரிமைகள் பறிபோவதை தமிழக முதல்வர் வேடிக்கை பார்க்கிறார் - பி.ஆர். பாண்டியன் குற்றச்சாட்டு

மேலும் மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து மூன்று பேர் போலிஸ் என பொய் சொல்லி தனது வீட்டிற்கு வந்து விசாரித்து, தன்னை புகைப்படம் எடுத்து சென்றதாக கூறினார். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று தாங்கள் போராடியதாகவும் பின்பு தான் தனது கணவர் இறந்து விட்டார் என்று எங்களிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும் வீட்டிற்கு வந்த 3 பேர் மீதும், மருத்துவமனை நிர்வாகம், அதன் MD மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றார். தற்போது மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையில் மருத்துவமனை பாதுகாவலர்கள், நிர்வாகத்தினர் என 11 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

click me!