கோவை கார் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், இவர்களை ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் வெடிவிபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவையில் ஆளுநர் ரவியின் உருவ பொம்மை எரிப்பு.. குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்..!
விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கார் வெடி விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயலான கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வழக்கு என் ஐ ஏ அதிகாரிகள் வசம் மாற்றப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையின் போது வெடிபொருட்கள் மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து என் ஐ ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் முகமது தல்ஹா, முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவுபிக், ஷேக் ஹிதயதுல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய 6 பேரையும் 10 நாட்கள் விசாரணைக் காவலில் அதிகாரிகள் எடுத்துள்ளனர். முதல் 3 நாட்கள் சென்னையில் விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு இவர்கள் கோவை அழைத்து வரப்பட்டனர்.
கோவை தற்காலிக என்.ஐ.ஏ அலுவலகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள இவர்கள் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் உயிரிழந்த ஜமீஷா முபீனுடன் கைது செய்யப்பட்டவர்கள் இந்த வனப்பகுதில் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நேரில் சந்தித்து கோவையில் சதித்திட்டம் தீட்ட திட்டமிடப்பட்டதற்கான ஆதாரகள் இருப்பதால் இந்த விசாரணை மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.