திமுக சார்பில் கோவையில் 1.5 லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம்; அமைச்சர் முத்துசாமி தகவல்

By Velmurugan s  |  First Published Apr 5, 2024, 6:18 PM IST

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருகின்ற 12ம் தேதி கோவையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிலையில், இதில் 1.5 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோருக்கு வாக்கு சேகரிக்க 12ம் தேதி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வருகை தர உள்ளனர். அதன்படி எல்அன்டி புறவழிச்சாலை, செட்டிபாளையம் அருகே பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்த பணிகளை அமைச்சர் முத்துச்சாமி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசணை நடத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துச்சாமி, தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒவ்வொரு நாடாளுமன்ற  தொகுதிக்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். 

Tap to resize

Latest Videos

நாம் அனைவரும் உறவினர்கள்; உங்கள் வாக்கு நமது சொந்தக்காரரான கை சின்னத்துக்கு தான் விழவேண்டும் - கேகேஎஸ்எஸ்ஆர் சூசகம்

இதேபோல் கோவை நாடாளுமன்ற தொகுதி,  பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கும் சேர்த்து எல்என்டி பைபாஸ் சாலை, செட்டிபாளையம் அருகே, 150 ஏக்கர் பரப்பளவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பிரச்சார கூட்டத்திற்கு ஏறத்தாழ 1.50 இலட்சம் பேருக்கு மேல் வர உள்ளனர். பல இடங்களில் குறிப்பிட்ட அளவு வருவார்கள் என்று கருதி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அதிக அளவிலானோர்  வந்தனர். 

தற்போது காங்கிரஸ் கட்சியினுடைய முன்னணி தலைவர் ராகுல் காந்தியும் வருகை தர உள்ளார். எனவே மிகுந்த முன்னேற்பாடுகளோடு நாங்கள் நடத்துவதற்கான ஏற்பாட்டை செய்திருக்கிறோம். எனவே தான், வாகனம் நிறுத்துவதற்கான இடம்,  அடிப்படை வசதிகளுடன் கூடிய அனைத்து வசதிகளும் இருக்கும் அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒன்னறை லட்சம் பேர் வர உள்ள நிலையில்,  வந்து செல்லக்கூடியவர்களுக்கு எந்த விதமான சிறு பிரச்சனைகளும் இல்லாமல் பாதுகாப்பாக பொதுமக்கள் வந்து செல்ல வேண்டும் என்ற ஏற்பாட்டையும் நாங்கள் செய்து வருகிறோம்.

முசிறி அருகே குறுக்கு பாதையில் சீறி பாய்ந்த பாரிவேந்தர்; மடக்கி பிடித்த இளைஞர்களால் பரபரப்பு
 
குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட உள்ளன. கோவை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற வேட்பாளர் ஈஸ்வர சாமி ஆகியோரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் நடைபெற உள்ளது. மேலும் இந்த கூட்டதில் அமைச்சர்கள் டி ஆர் பி ராஜா,  சக்கரபாணி, மாவட்ட செயலாளர்கள் இணைந்து இதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றோம் என்றார்.

click me!