என் அண்ணன் மு.க ஸ்டாலின்.. வேறு யாரையும் இப்படி அழைப்பதில்லை.. கோவையில் உருகிய ராகுல் காந்தி..

By Raghupati RFirst Published Apr 12, 2024, 8:43 PM IST
Highlights

என் அண்ணன் மு.க. ஸ்டாலின் ; நான் வேறு எந்த அரசியல்வாதிகளையும் இப்படி அழைப்பதில்லை என்று கோவை பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி  ராகுல் காந்தி பேசியுள்ளார்.

கோவை செட்டிபாளையத்தில் நடந்து வரும் திமுக தலைமையிலான கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டனர்.  இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  டியர் ராகுல் பிரதர். புதிய இந்தியாவுக்கு விடியல் தருக! இந்தத் தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான். பிரதமர் மோடி எப்பொதும் வெளிநாட்டு டூரில் இருப்பார்" என்று பேசினார்.

அடுத்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "என் அண்ணன் மு.க. ஸ்டாலின். நான் வேறு எந்த அரசியல்வாதிகளையும் இப்படி அழைப்பதில்லை என்று கூறினார். தமிழ்நாட்டு மக்களிடம் நான் கொண்டிருக்கிற உறவு அரசியல் உறவல்ல. அதுவொரு குடும்ப உறவு; அவர்களை நான் ஆத்மார்த்தமாக நேசிக்கின்ற உறவு ஆகும்.

தமிழையும் தமிழரையும் மோடியால் தொட்டுக்கூட பார்க்கமுடியாது.  தற்போது நடப்பது மோடி அரசு அல்ல, அதானி அரசு ஆகும். 80% இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இந்தியா பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியில் இருந்ததை விட மோசமான நிலையில் உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஆட்சிக்கு வந்ததும் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம். நீட் தேர்வு குறித்து மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம். பிரதமர் மோடிக்கு தோசை பிடிக்குமா? வடை பிடிக்குமா? என்பது பிரச்னை இல்லை" என்று பேசினார் ராகுல் காந்தி.

IRCTC Tour: கம்மி பட்ஜெட்டில் சுவிட்சர்லாந்து முதல் பிரான்ஸ் வரை ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டுமா?

click me!