எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் பழனிசாமி முதல்வராக வருவார் - எஸ்.பி. வேலுமணி பேச்சு

By Velmurugan sFirst Published May 26, 2023, 5:42 PM IST
Highlights

தமிழகத்தில் எப்போது சட்டமன்ற தேர்தல் நடந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார் என்று முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரணங்கள், போதை பொருட்கள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து,  அதிமுக சார்பில் வருகின்ற 29ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசணைக் கூட்டம் கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”வருகின்ற 29 ம் தேதி திமுக அரசைக் கண்டித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கோவையில் மேட்டுப்பாளையம், தெற்கு வட்டாச்சியர் அலுவலகம், பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கையாளகாத திமுக அரசை அகற்ற வேண்டும். 30 ஆயிரம் கோடி ரூபாயை ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடித்துள்ளது. நிதியமைச்சர் பெரிய குடும்பத்தில் இருந்து வந்ததால், உண்மையை தான் பேசுவார்.

ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்றிருப்பது முதலீட்டை ஈர்க்கவா? அல்லது கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யவா? எங்கு சென்றாலும் இந்த ஆட்சி எப்போது போகும் எனவும், திமுகவிற்கு ஓட்டு போட்டது பெரிய தவறு எனவும் மக்கள் நொந்து போய் சொல்கின்றனர். 2 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய கெட்ட பெயர் எடுத்த ஆட்சி திமுக தான். இந்தியாவில் பல முதலமைச்சர்கள் இருக்கின்றனர். ஆனால் எதுவும் தெரியாத முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும் தான். 

விளம்பரத்தில் மட்டும் தான் இந்த ஆட்சி செல்கிறது. அதிமுக அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு, ரெய்டு நடத்தினார்கள். அதை தொலைக்காட்சிகள் 3 நாட்கள் லைவ் ஒட்டினார்கள். ஆனால் இன்று எந்த சேனலிலும் லைவ் ஓடவில்லை. வேறு எதோ செய்தி ஓடுகிறது. ஸ்டாலின் பெரிய முதலமைச்சர் என ஊடகங்களில் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் எந்த திட்டமும் செய்யவில்லை. முதலமைச்சர் துபாய் சென்று, எத்தனை முதலீடுகளை ஈர்த்து வந்தார்? எதிர்கட்சியாக இருந்து மக்களுக்காக ஒப்பற்ற பணியாற்றும் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். 

அமைச்சர் செந்தில் பாலாஜிக்காக ஐடி அதிகாரிகளுடன் மல்லுக்கட்டிய மேயர் கவிதா கணேசன்

எண்ணற்ற திட்டங்களை தந்தவர் எடப்பாடி பழனிசாமி. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் 95 சதவீத வேலை நிறைவு பெற்றுள்ளது. ஆனால் அத்திட்டத்தை இன்னும் செயல்படுத்தவில்லை. அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திமுக அரசு திறக்கிறது. மக்கள் கொந்தளித்து போய் உள்ளார்கள். எங்கு பார்த்தாலும் இலஞ்சம். பணம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை உள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் எங்கு போனார்கள் எனத் தெரியவில்லை. தொடர்ந்து மக்களுக்கு அதிமுகவினர் தான் சேவை செய்து வருகிறார்கள். அனைத்து தரப்பு மக்களுக்கும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என முடிவு செய்து விட்டார்கள். அதிமுகவிற்கு ஓட்டுப்போடாத அரசு ஊழியர்கள் கூட எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டுமென நினைக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம்.

கோவையில் சில்லிங் பிராந்தி விற்பனை செய்ததை தட்டிக் கேட்டவரை திமுகவினர் அடித்து கொலை செய்துள்ளனர். எல்லா இடங்களிலும் கஞ்சா விற்பனை நடக்கிறது. காரில் போய் செயின் அறுக்கிறார்கள். காவல் துறை அதிகாரிகள் எந்த வேலையும் செய்வதில்லை. மக்களுக்கு பாதுகாப்பில்லை. கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் வரவில்லை. கோவை மாவட்டத்தை முழுமையாக புறக்கணிக்கிறார்கள். கேட்க நாதியில்லாமல் கோவை மாவட்டம் இருக்கிறது. எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார்.

ஐடி ரெய்டுக்கு எதிராக போராடியவர்களுக்கு தயிர் பச்சடியுடன் பரிமாறப்பட்ட பிரியாணி

திமுக ஆட்சியை விமர்சித்து சாதாரணமான பதிவு போட்டாலே, அதிமுக ஐடிவிங்க் நிர்வாகிகள் மீது வழக்கு போடுகிறார்கள். அதிமுக ஆட்சியில் திமுக தூண்டுதலால் 20 ஆயிரம் போராட்டங்கள் நடந்தது. இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? திமுகவினர் திட்டமிட்டு மக்களை ஏமாற்றினார்கள். திமுகவினர் உடன் சேர்த்து அதிமுகவினர் மீது காவல் துறையினர் பொய் வழக்கு போடுகிறார்கள். அவர்கள் எங்கே போய் விட முடியும்? தமிழ்நாட்டில் தானே வேலை பார்க்கணும். நாங்கள் நியாயத்திற்கு புறம்பாக போகமாட்டோம். அநியாயமாக திமுக உடன் சேர்ந்து பொய் வழக்கு போட்டால்,  பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். 

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவதை யாராலும் தடுக்க முடியாது. கோவை காவல் துறை மிகவும் மோசம். 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும். நமக்கு எதிரி திமுக மட்டும் தான். கள்ளச்சாரயம், டாஸ்மாக்கில் கள்ள மது விற்பனை நடைபெறுகிறது. திமுக கட்சியே இல்லாத சூழலை முதலமைச்சரே ஏற்பாடு செய்து கொண்டுள்ளார். நாளை நமதே. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம்” எனத் தெரிவித்தார்.

click me!