புதிதாக குடிப்பழக்கம் பழகும் நபர்களை கண்டறிந்து கவுன்சிலிங் கொடுக்கும் டாஸ்மார்க் ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் சன்மானம் வழங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூரில் பல்வேறு நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டார். முன்னதாக இருகூர் பேரூராட்சியில் முன் கள தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். ஆயிரம் முன்கள பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் முத்துசாமி முதல்வர் ஸ்டாலின் தினம் தோறும் எங்களிடம் இன்று நடைபெற்றது எத்தனை நலத்திட்டத்தை தொடங்கி வைத்தீர்கள், அதனால் எத்தனை பொதுமக்கள் நலம் பெற்றனர் என்பதெல்லாம் கேட்டு அறிவார். பள்ளியில் ஆசிரியர் ரிப்போர்ட் கார்டு வாங்குவது போல பள்ளி மாணவனை போல திட்டங்களை குறித்து அறிந்துகொண்டு அவரிடம் கொடுத்து வருகிறோம்.
சென்னையில் பள்ளி மாணவர்களை தாக்கி சீன் காட்டிய நடிகையை அலேக்கா தூக்கி சென்ற போலீஸ்
அனைத்து அமைச்சர்களும் காலை உணவு திட்டத்தில் வியாழக்கிழமை அன்று ஒரு பள்ளியில் சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுப் உபாதை ஏற்பட்டது. அது முதல்வர் பார்வைக்கு சென்றது உடனடியாக அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமையில் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் உணவில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பது குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு அதனையும் சரிப்படுத்தியதாக தெரிவித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, இருக்கிற பேரூராட்சியில் காலை உணவுத் திட்டம் வழங்கி இருப்பது மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்று. இது அனைத்து பேரூராட்சிகளிலும் செயல்படுத்த வேண்டும். கலைஞர் நூற்றாண்டை ஒட்டி 2000 பேருக்கு நாள்தோறும் உணவானது இப்பகுதியில் வழங்கப்பட்டு வருவது. தூய்மை பணியாளர்களை அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும் கோரிக்கை பல நாட்களாக இருந்து வரக்கூடிய நடைமுறை இது திடீரென அதனை மாற்ற முடியாது. ஆனால் நிச்சயமாக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்கும்.
பழிவாங்கும் நடவடிக்கையாக அமைச்சர்கள் வீட்டில் நடத்தப்படும் சோதனை இருப்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று. டாஸ்மார்க் ஊழியர்களுக்கான போனஸ் அனைத்து தர பணியாளர்களுக்கும் கிடைக்கும் போது கிடைக்கும். டாஸ்மார்க் கடைக்கு வரும் புதிய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் அறிவுறுத்தி இருக்கிறார். அத்தகைய நபர்களை கண்டறிந்து கவுன்சிலிங் கொடுத்து டாஸ்மார்க் பணியாளர்கள் மூலம் அதனை செய்து, அந்த பணியை செய்யும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பரிசு வழங்கும் முறையையும் செய்ய வேண்டுமென முதல்வர் கூறி இருக்கிறார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.