கோவையில் போதிய இட வசதி இல்லாத காரணத்தால் வஉசி உயிரியல் பூங்காவின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்த நிலையில், அங்கு பராமரிக்கப்பட்டு வந்த விலங்குகள் வேறு பகுதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டன.
மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022ம் ஆண்டு கோவையில் செயல்பட்டு வரும் வஉசி உயிரியல் பூங்காவில் போதிய இடவசதி இல்லாததால், பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது. இதனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உயிரியல் பூங்கா செயல்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இங்குள்ள விலங்குகள், பறவைகள் ஆகியவை இடம் மாற்றம் செய்யப்பட்டன. இங்குள்ள விலங்குகள் பறவைகள் அனைத்தும் வண்டலூர் பூங்கா, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், வேலூர் உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்படுகின்றன.
இதற்காக இன்று கோவை வந்த உயிரியல் பூங்கா ஆணைய நிர்வாகிகள் இங்குள்ள விலங்குகளை கணக்கிட்டு ஆய்வு செய்து அவற்றை இடமாற்றம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டனர். இன்றைய தினம் பாம்புகள், முதலைகள், குரங்குகள், ரோஸ் பெலிகன் பறவைகள் உள்ளிட்டவை இடமாற்றம் செய்யப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து இங்குள்ள அனைத்து விலங்குகளும் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 14வது நபர் அதிரடி கைது; புலனாய்வு அதிகாரிகள் பரபரப்பு தகவல்
இது குறித்துப் பேசிய வ.உ.சி உயிரியல் பூங்கா இயக்குநர் சரவணன், மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் 2022ஆம் ஆண்டு போது இட வசதி இல்லாததால் இதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டதாகவும், இதனால் இங்குள்ள விலங்குகளை எல்லாம் வண்டலூர், சத்தியமங்கலம், வேலூருக்கு இடமாற்றுவதாக தெரிவித்தார். இன்று பாம்புகள், குரங்குகள், முதலைகள், ரோஸ் பெலிக்கன் ஆகியவற்றையெல்லாம் எடுத்து செல்வதாக தெரிவித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D