15க்கும் மேற்பட்ட வழக்குகள்; எண்கவுண்டருக்கு பயந்து நீதிமன்றத்தில் சரணடைந்த பிரபல ரௌடி

By Velmurugan s  |  First Published Nov 3, 2023, 12:42 AM IST

கோவையில் 15க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ரௌடி ஒருவர் காவல் துறையினரின் எண்கவுண்டருக்கு பயந்து நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் மீது சரவணம்பட்டி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கஞ்சா கடத்தல்  உட்பட 15 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில் வழக்கு தொடர்பாக போலீசார் சண்முகத்தை தேடிய போது அவர் தலைமறைவாகவே இருந்துள்ளார். 

இதனையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்களை கைது செய்து விடுவதாகவும்  சண்முகத்தை என்கவுன்டர் செய்து விடுவதாகவும் போலீசார் மிரட்டியதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் இன்று ரவுடி சண்முகம் தனது வழக்கறிஞர்களுடன் கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 

Latest Videos

undefined

மேலும் போலீசார் சுட்டு விடுவேன் என மிரட்டுவதாகவும்  குடும்பத்தினர் மீது கஞ்சா விற்பதாக  பொய் வழக்கு போட்டு விடுவதாக மிரட்டுவதாகவும்  குடும்பத்தினருக்காக நீதிமன்ளத்தில்  சரண் அடைவதாகவும் 15 வழக்குகள் இருப்பதால் போலீசார் தொடர்ந்து தேடி வருவதாகவும், எனவே தானாக முன் வந்து சரண் அடைவதாகவும், சிறையில் இருந்து வெளியில் வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றது எனவும்

சென்னையில் தயார் நிலையில் 169 நிவாரண முகாம்கள்; அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

திருந்தி வாழ்ந்து வரும் தன்னை  போலீசார் தொடர்ந்து தேடி வருவதால் வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்தில்  சரண் அடைவதாகவும் ரவுடி சண்முகம் சரணடைந்தது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். தனது சகோதரர் மீதும் 5 வழக்குகள் இருப்பதாகவும்  சமீபத்தில் அவரை பிடித்த போலீசார் கை, கால்களை உடைத்து விட்டதாகவும் ரவுடி சண்முகம் தனக்கு எதுவும் ஆகாமல் இருக்கவே மக்கள் முன்னிலையில் நீதிமன்றத்தில் சரண் அடைவதாக  சிறையில் இருந்தே மற்றதை பார்த்து கொள்வதாக ரவுடி சண்முகம் சரணடைந்தது குறித்து தகவல் தெரிவித்தார்.

click me!