தோட்டத் தொழிலாளியை தாக்கிய சிறுத்தை... ரூ.10,000 நிதியுதவி வழங்கி அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆறுதல்!!

Published : Apr 25, 2023, 11:35 PM IST
தோட்டத் தொழிலாளியை தாக்கிய சிறுத்தை... ரூ.10,000 நிதியுதவி வழங்கி அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆறுதல்!!

சுருக்கம்

சிறுத்தை தாக்கி மருத்துவ சிகிச்சை பெற்று வரும் தேயிலை தோட்டத் தொழிலாளியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். 

சிறுத்தை தாக்கி மருத்துவ சிகிச்சை பெற்று வரும் தேயிலை தோட்டத் தொழிலாளியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் சிறுகுன்றா என்ற தனியார் எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் அணில் ஓராண். இவரை இரு தினங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று தாக்கியது.

இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் போர்வெல் பணியின் போது விபத்து; வடமாநில தொழிலாளர் உயிரிழப்பு

இதில் படுகாயமடைந்த அவர் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் அணில் ஓராணை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிறுக சிறுக சேமித்த பணத்தை நிவாரண நிதிக்காக எம்.பி. கனிமொழியிடம் வழங்கிய சிறுமிகள்

மேலும் 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கினார். இதுமட்டுமின்றி அணில் ஓரானின் குடும்பத்தினரையும் சந்தித்து பேசினார். அப்போது மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இது இருக்கறதாலதான பொண்ணுங்க கூட ஓவராக ஆட்டம் போடுற! ஃபுல் மப்பில் தூங்கிய கணவரை கதறி அலறவிட்ட மனைவி.!
கோவையில் 3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு.. மதில் சுவரை இடித்து கையகப்படுத்துங்க.. பொதுமக்கள் கோரிக்கை!