கோவையில் பாலம் வேலை காரணமாக வாகனங்கள் ஒருவழிப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்துகள் ஒருவழிப்பாதையில் எதிர் திசையில் வருவதால் பிற வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை ஜி என் மில்ஸ் பகுதியில் பாலம் வேலை பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. கவுண்டம்பாளையம் பாலம் வேலை நிறைவடைந்து தற்போது மக்கள் பயன்படுத்தி வர கூடிய சூழலில் அடுத்ததாக ஜி என் மில்ஸ் பகுதியில் பாலம் வேலை நடைபெற்று வருகிறது.
பாலத்தின் இருபுறங்களில் உள்ள சாலைகள் சிறிய அளவில் உள்ளதால் வாகனங்கள் அந்த பகுதியில் ஊர்ந்து செல்லக்கூடிய நிலையே காணப்படுகிறது. அதேபோல காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் அணிவகுத்து இருக்கக்கூடிய காட்சிகளையும் அந்த பகுதியில் நம்மால் பார்க்க முடிகிறது.
நீலகிரியில் பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; உறவினர் துணீகரம்
அந்த வழியாக வரும் தனியார் பேருந்துகள் சாலையில் ஒருவழிப்பாதையில் எதிர் திசையில் வருவதாகவும், அதேபோல வரக்கூடிய ஆம்புலனஸ்களுக்கு வழி விடாமலும் உள்ளனர். ஆம்புலன்ஸ் கூட காத்திருக்க கூடிய அவலமாக உள்ளதாகவும், சாலையில் டிராபிக் அதிக அளவில் இருப்பதால் இந்த பகுதியில் சாலையை இருபுறமும் அகலப் படுத்த வேண்டும் என்றும் அதேபோல போக்குவரத்து காவலர் இந்த பகுதியில் நிற்க வேண்டும் என்றும், பால வேலையையும் துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையானது எழுந்துள்ளது.
இன்ஸ்டா காதலால் சீரழிக்கப்பட்ட 11ம் வகுப்பு மாணவி; 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது
அதனை ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். தற்பொழுது அது வைரலாகி வருகிறது.