வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது; சொன்னதை செய்ய முடியுமா? உ.பி. சாமியாருக்கு நேரு சவால்

By Velmurugan s  |  First Published Sep 6, 2023, 2:44 PM IST

வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக் கூடாது என்று உத்தரபிரதேச மாநில சாமியாருக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் கே.என்.நேரு, நீங்கள் சொன்னதை உங்களால் செய்ய முடியுமா என்று சவால் விடுத்துள்ளார்.


கோவை வ.உ.சி மைதானத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முடிவற்ற பணிகளை, அத்துறையின் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் 11.8  கோடி மதிப்பீட்டில் 27 முடிவுற்ற பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. மேலும் 67.48 கோடி மதிப்பீட்டில் 558 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு  32.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 703 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் சிறப்புரை ஆற்றினார். 

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், கோவை மாநகரில் நாள் ஒன்றுக்கு 298 mlt குடிநீர் தேவை. ஆனால் 214 mlt  தண்ணீர் தான் கிடைப்பதாக தெரிவித்தார். மேலும் பில்லூர் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறப்போகிறது. அத்திட்டத்தில் இன்னும் ஒன்றரை கி.மீ. தான் பாக்கி உள்ளது. 188 mlt தண்ணீர் கூடுதலாக வந்ததும் கோவை மாநகருக்கு தினமும் தண்ணீர் வழங்கப்படும். 

Latest Videos

undefined

பல்லடம் அருகே 16 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஓட்டுநரை கொத்தாக அள்ளிச்சென்ற காவல்துறை

அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து தினமும் தண்ணீர் வழங்கப்படும். சிறுவாணி, ஆழியார் அணைகள் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் கேரள அரசுடன் கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கோவை மாநகரில் 280 கிமீ க்கு சாலைகளை சீரமைக்க பணம் ஒதுக்கி உள்ளோம். 

பட்டியலின பெண் சமைப்பதை சாப்பிடுவதா? சத்துணவு திட்ட பணியாளருக்கு எதிராக போர்க்கொடி; ஆட்சியர் அதிரடி

உத்திர பிரதேச சாமியார் வாய்க்கு வந்ததை பேசுகிறார். அவர்களால் அதை செய்ய முடியுமா? என சவால் விடுத்தார். நாங்கள் திராவிட இயக்க கொள்கையை 100 வருடங்களாக பேசி வருகிறோம். இவர்கள் புதிதாக ஆரம்பித்துள்ளார்கள். பாரத் என வந்தாலும், இந்தியா என இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம். ஆனால் நாங்கள் எப்போதும் போல ஒன்றிய அரசு என்று தான் அழைப்போம் என நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சொல்லியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்காத காரியம். அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை எனத் தெரிவித்தார்.

click me!