டாஸ்மாக் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் 1 மாதத்தில் முற்றுப்புள்ளி - அமைச்சர் முத்துசாமி தகவல்

By Velmurugan s  |  First Published Sep 5, 2023, 5:57 PM IST

டாஸ்மாக் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு மாத காலத்தில் தீர்வு காணப்படும் என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கோவையில் தெரிவித்துள்ளார்.


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கடன் உதவிகளை வழங்கினார். 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர், முதலமைச்சர் முன்னெடுப்பின் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. நலத்திட்டங்கள், வளர்ச்சி பணிகள் செய்வதை அதிகாரிகள் கவனம் எடுத்து செய்து வருகின்றனர். தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் 68 பேருக்கு 37.50 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட டார்கெட்டை விட கூடுதலாக செய்யும் வகையில் ஒவ்வொரு திட்டத்திலும் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். கோவை மாநகரில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல பணிகள் தொடர்ந்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Latest Videos

undefined

திருவாரூரில் கொலை வழக்கில் ஆஜரான நபரின் தலையை சிதைத்து கொடூர கொலை; மர்ம கும்பல் வெறிச்செயல்

மருதமலை கோவிலுக்கு செல்ல போதிய போக்குவரத்து வசதி குறைவாக உள்ளது. அங்கு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகன நிறுத்துமிடம் 8 ஏக்கரில் அமைக்கப்படும். பீக் ஹவர், மின்கட்டணம் தொடர்பாக துறை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும். டாஸ்மாக் கடை தொடர்பாக சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. 

அதற்காக ஒரு மாத கால அவகாசம் கேட்டுள்ளோம். டாஸ்மாக் கடைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் தொடர்பாக தவறான கருத்துகள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு மாத காலத்தில் டாஸ்மாக் தொடர்பான பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் மாணவி பலி; வெயிலில் நிற்க வைக்கப்பட்டதால் சோகம்?

பாஜக சொல்வதை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தால், மக்கள் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு செயல்பட முடியாது. உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை அறிவிக்கப்பட்டு இருப்பது ஜனநாயகத்தில் தவறான அறிவிப்பு. இது குறித்து மக்கள் முடிவு எடுக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் வருகின்ற 24ம் தேதி திருப்பூருக்கு வருகை தர உள்ளார். கோவைக்கு முதலமைச்சர் ஆய்வு செய்ய வருவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். கோவை மாநகராட்சி வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பிரச்சினைக்கு ஒரு மாத காலத்தில் முழுமையாக தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார்.

click me!