கோவை பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர். எனினும், சிறிது நேரத்தில் அந்த சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது.
Leopard Found Dead : கோவை ஓணாபாளையம் அதன் சுற்றுப்பகுதியில் கால்நடைகளை, குறிப்பாக ஆடுகளை சிறுத்தை ஒன்று வேட்டையாடி வந்தது. சிறுத்தையின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டு பணிகளை அதற்கான பணிகளை மேற்கொண்டனர்.
ஓணாபாளையத்தில் ஆடுகள் அடைக்கப்பட்ட இடத்துக்கு சிறுத்தை வந்து சென்றது கேமரா மூலம் கண்டறியப்பட்ட நிலையில், திங்கள்கிழமை இரவு வனத்துறையினர் ‘ட்ராப் நெட்’ மூலம் சிறுத்தை பிடித்தனர். பின்னர், கூண்டில் அடைக்கப்பட்ட சிறுத்தை, உடனடியாக மருதமலை வன பணியாளர் குடியிருப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையும் படிங்க: திருப்பதி மலையில் மீண்டும் அச்சுறுத்தும் சிறுத்தை.! பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம்
அங்கு, வன கால்நடை மருத்துவர் மூலம் சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மிக மோசமாக நிலையில் இருந்த சிறுத்தை, சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று உயிரிழந்தது.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறுத்தை? மோடி அமைச்சரவை பதவியேற்பில் தென்பட்ட மிருகம்..!
கோவை வனத் துறையினர் கூறுகையில், "இறந்த சிறுத்தையின் உடலில் வேறுசில காயங்கள் இருந்தன. வேறொரு விலங்குடன் ஏற்பட்ட மோதலில் சிறுத்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பற்கள் உடைந்துள்ளன. உடற்கூராய்வில் சிறுத்தையின் சிறுநீரகம், இதயம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது" என்றனர்.