கோவை வால்பாறையில் சிறுத்தை தாக்கி வடமாநில தொழிலாளர் படுகாயம்

By Velmurugan s  |  First Published Apr 22, 2023, 9:43 AM IST

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் வட மாநில தொழிலாளர் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி நகர்வதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர். வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

கிறிஸ்தவர்களாக மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு; தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்

Tap to resize

Latest Videos

இந்நிலையில் வால்பாறை  சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில்  35வது தோட்டப்பகுதியில் வட மாநில தொழிலாளரான அணில் ஓரான் (வயது 26) வேலை செய்து கொண்டிருந்தார். இவரை  தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை காலில் கடித்து பலமாக தாக்கியது. இதனைத் தொடர்ந்து சிறுத்தை தாக்கியவரை  காப்பாற்றி வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர்.  

காலில் பலத்த காயமடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டதால் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு  அவரை கோவை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வனத்துறையினருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு வழங்க  கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!