கோவை மாவட்டத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த வாலி தண்ணீரில் மூழ்கி 1 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை வடவள்ளி இ.பி.காலணி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 33). ஐடி ஊழியர். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய நிலையில், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 1 வயதில் வர்ஷிகா, வர்ணிகா என்ற இரட்டை பெண் குழந்தைகளும் இருந்தனர். புதன்கிழமை இரவு சமையல் வேலைகளை முடித்த காயத்ரி தண்ணீர் ஊற்றி வீட்டை சுத்தம் செய்துள்ளார்.
வீட்டை சுத்தம் செய்துவிட்டு, பாதியளவு தண்ணீருடன் வாலியை வீட்டின் ஒரு அறையில் வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார். இந்நிலையில் வழக்கம் போல காயத்ரி காலையில் சமைத்துக் கொண்டிருந்தார். அவரது இரண்டை குழந்தைகள் அறையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குழந்தை வர்ஷிகா (1) தண்ணீர் வாலியின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, தண்ணீருடன் இருந்த வாலியில் தவறி தலைகீழாக விழுந்துள்ளது.
சிறுவாணியில் தடுப்பணை கட்டும் கேரளா அரசு - தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை
வர்ணிகாவின் அழுகை சத்தம் கேட்டு காயத்ரி வெளியே வந்து பார்தத போது, குழந்தை வர்ஷிகா தண்ணீர் மூழ்கியிருந்தது தெரியவந்தது. குழந்தையை மீட்ட காயத்ரி கணவர் பாக்கியராஜ் உதவியுடன் குழந்தையை அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தையை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாலிபரை கடத்தி 6 மணி நேரம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி துன்புறுத்தல் - 6 பேர் கைது
கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தை பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக வடவள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.