சிறுவாணியில் தடுப்பணை கட்டும் கேரளா அரசு - தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை

By Velmurugan s  |  First Published Apr 21, 2023, 12:10 PM IST

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எச்சரித்துள்ளனர்.


தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறக்கையில், “கோவை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிற சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள மாநிலம் அட்டப்பாடி கூலிகடவு - சித்தூர் சாலையில் நெல்லிபதி என்ற இடத்தில் கேரளா அரசு ஐந்து அடி உயரத்தில் தடுப்பணை கட்டி 90 சதவீத பணிகள் முடிந்திருக்கின்றது. மேலும் இரண்டு தடுப்பணைகளை கட்ட திட்டமிட்டு இருக்கின்றார்கள்.

நாகையில் ஆயுதப்படை பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

Latest Videos

undefined

ஏற்கனவே சிறுவாணி அணையில் மழை காலங்களில் முழு கொள்ளளவான 52 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்க விடாமல் கேரளா அரசு தடுத்து வருகிறது. கோடை காலத்தில் வரக்கூடிய தண்ணீரையும் சிறுவாணி அணைக்கு வராமல் தற்போது தடுப்பணைகளை கட்டி வருகிறது. சிறுவாணி ஆறும், பவானி ஆறும் காவிரி மேலாண்மை வாரியத்தில் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள். ஆனால் கேரளா அரசு காவிரி மேலாண்மை வாரியத்திலும் அனுமதி பெறாமல் சிறுவாணியில் தடுப்பணைகளை கட்டி வருகிறது.

வாலிபரை கடத்தி 6 மணி நேரம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி துன்புறுத்தல் - 6 பேர் கைது

இந்த தடுப்பணைகளை தடுக்காவிட்டால் கோவை மாவட்டத்திற்கு முழுமையாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். ஏற்கனவே பவானி ஆற்றிலும் இதுபோல தடுப்பணைகளை கட்டியுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு சிறுவாணியில் கட்டப்படும் தடுப்பணைகளை தடுத்து நிறுத்திட வேண்டும். கேரள அரசானது இந்த திட்டத்தை கைவிடாவிட்டால், அனைத்து கட்சி, இயக்கங்கள், பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை முன்டெடுக்க நேரிடும்” எனவும் எச்சரித்துள்ளனர்.

click me!