காவலர் பயிற்சி பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த எஸ்ஐயின் புல்லட் திருட்டு; காவலர்கள் அதிர்ச்சி

Published : Apr 20, 2023, 06:03 PM IST
காவலர் பயிற்சி பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த எஸ்ஐயின் புல்லட் திருட்டு; காவலர்கள் அதிர்ச்சி

சுருக்கம்

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளரின் இரு சக்கர வாகனம் திருட்டு.

கோவை மாவட்டம் செல்வபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ள செல்வக்குமார் தனது வாகனத்தை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் குடியருப்பு முன்பாக நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

மீன் பிடிப்பதற்காக வெடிகுண்டு வீசிய மீனவர்; நீருக்குள் நீதிய நபர் உடல் சிதறி பலி

இச்சம்பவம் குறித்து உதவி ஆய்வாளர் செல்வகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் பந்தய சாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள CCTV காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்த போது, நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை திருடி செல்வது பதிவாகியுள்ளது. இருசக்கர வாகனத்தை திருடி  சென்ற நபர் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பொது மக்களுக்கு ஏற்படும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும் பணியாற்றும் காவல் துறையினரின் இருசக்கர வாகனத்தையே மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?