வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு

By Velmurugan s  |  First Published Jun 24, 2023, 11:11 AM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித் திரியும் கொம்பன் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அதற்கு சிகிச்சை அளிக்க வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொம்பன் என்றழைக்கப்படும் காட்டு யானை அவ்வபோது சுற்றித் திரிவது வழக்கமானதாக உள்ளது. அவ்வபோது வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கொம்பன் விவசாயப் பயிர்களை உண்பதும், குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதும் அவ்வபோது நிகழும்.

இந்நிலையில் வாயில் காயத்துடன் சுற்றித் திரியும் பாகுபலி காட்டு யானைக்கு சிகிக்சையளிக்க யானையின் இருப்பிடத்தை பைரவன், வளவன் என்ற  இரண்டு மோப்ப நாய்கள் உதவியுடன்  வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக தேடி வருகின்றனர். இந்நிலையில் பாகுபலி யானையை கண்டுயறிந்து அதற்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Latest Videos

புதுக்கோட்டையில் 3 பிரிவினர் இடையேயான மோதலால் மூடப்பட்ட கோவில் 2 ஆண்டுகளுக்கு பின் திறப்பு

இதையடுத்து பாகுபலி யானையை பிடிப்பதற்கு முதுமலை யானைகள் முகாமில் இருந்து வசீம் மற்றும் விஜய் என்ற இரண்டு கும்கி யானைகள் நேற்று நள்ளிரவு மேட்டுப்பாளையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இன்று பாகுபலி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கும்மி யானைகள் தயார் நிலையில் இருக்கும் சூழலில் 3-வது நாளாக பாகுபலி காட்டு யானை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

பாகுபலி யானைக்கு வாயில் ஏற்பட்டுள்ள காயம் சிறியதாக இருந்தால் பழங்களில் மருந்து மாத்திரைகளை வைத்து கொடுத்து அதற்கு சிகிச்சை அளிப்பது என்றும் பெரிய காயமாக இருந்தால் டாப்ஸ்லிப் யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று அங்கு வைத்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

பாகுபலி யானையை பிடித்து சிகிச்சை அளிப்பதற்காக கோட்ட உதவி வன பாதுகாவலர் தினேஷ் குமார் தலைமையில் வனச்சரகர்கள், வனவர்கள்,வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் யானை யானது விளாமரத்தூர் பகுதியில் இருந்து மேல் வனப்பகுதியில் தொடர்ந்து முன்னேறி செல்லும் நிலையில் யானையை கண்காணிக்க தனி குழுக்கள் அமைத்து தேடி வருகின்றனர். யானையை கண்டவுடன் அதனை சமநிலை பகுதிக்கு வரவழைத்து அதற்கு பின் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

நாங்க இருக்கோம்; ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு தொலைபேசியில் உறுதி அளித்து நம்பிக்கை ஏற்படுத்திய கனிமொழி

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கால்நடை மருத்துவர் சுகுமார் யானை பாகுபலிக்கு வாயில் காயம் ஏற்பட்டது நாட்டு வெடியை கடித்தது தான் காரணம் என கூறுவது தவறான தகவல் என தெரிவித்துள்ளார். யானையை இரண்டு நாட்களாக கண்கானித்த நிலையில் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தான் காயம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

யானையை தலைமை வன பாதுகாவலர் அறிவுறுத்தலின் பேரில் யானையை பிடித்து மருத்துவ சிகிச்சை அளித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

click me!