பொள்ளாச்சியில் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 18 மாணவர்கள் மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி

By Velmurugan s  |  First Published Jun 24, 2023, 10:51 AM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு கூடத்திலிருந்து மதிய  உணவு வழங்ப்பட்டது. சிறிது நேரத்தில்  சத்துணவு சாப்பிட்ட மாணவர்களில் 18க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுவலி  ஏற்றப்பட்டது.

இதனை அடுத்து ஆசிரியர்கள்  பள்ளி மாணவர்களை கோட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 18 சிறுவர்களில் மூன்று பேருக்கு தலை சுற்றல், வாந்தி, மயக்கம் மற்றும் 15 மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதை  அடுத்து அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Latest Videos

புதுக்கோட்டையில் 3 பிரிவினர் இடையேயான மோதலால் மூடப்பட்ட கோவில் 2 ஆண்டுகளுக்கு பின் திறப்பு

இதனால் பள்ளி மற்றும் மருத்துவமனை பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை வட்டாசியர், வால்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் மற்றும் அதிகாரிகள் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

click me!