பிரபலங்களால் வேலையை இழந்த ஷர்மிளா; கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் பணி நீக்கம்

By Velmurugan s  |  First Published Jun 23, 2023, 1:32 PM IST

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளாவை பணி நீக்கம் செய்வதாக தனியார் பேருந்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


தமிழகத்திலேயே முதல் பெண் பேருந்து ஓட்டுநராக கோவை வடவள்ளியை சேர்ந்த மகேஷ் என்பவரது மகளான ஷர்மிளா என்ற இளம்பெண் கோவை காந்திபுரம் முதல் சோமனூர் வரையிலான வழித்தடம் எண் 20 A  ல் இயக்கப்படும் வீ வீ எனும் நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் பேருந்தில் ஓட்டுநராக கடந்த மார்ச் மாதம் முதல் பணியாற்றி வருகிறார். 

Latest Videos

முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை திமுக துணை பொது செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். மேலும் அதே பேருந்தில் பீளமேடு வரை பயணம் செய்தார்.

கோவையில் பெண் பேருந்து ஓட்டுநரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த எம்பி கனிமொழி

அப்போது அப்பேருந்தில் பயிற்சி நடத்துநராக பணியில் இருந்த அன்னத்தாய் என்ற பெண் கனிமொழி உள்ளிட்டோரிடம் பயணச்சீட்டு எடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் ஓட்டுநரான ஷர்மிளா ஏற்கனவே அவர்கள் டிக்கெட் எடுத்து விட்டதாகவும் அவர்களிடம் டிக்கெட் கேட்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார். பின்னர் பேருந்தில் பயணம் செய்த கணிமொழி பீளமேடு பகுதியில் இறங்கிய நிலையில் சம்பவம் குறித்து நடத்துநரான அப்பெண் தனது அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

பெண் ஓட்டுநராக இருக்கும் பேருந்தில் பயணிப்பது பெருமிதமாக உள்ளது - வானதி சீனிவாசன் பேட்டி

புகாரின் அடிப்படையில் ஷர்மிளா மற்றும் அவரது தந்தை மகேஷ் ஆகிய இருவரையும் அலுவலகத்திற்கு அழைத்து விசாரித்த பேருந்தின் உரிமையாளர் துரைக்கண்ணு உனது விளம்பரத்திற்காக எல்லோரையும் அழைத்து வராதே. யார் வந்தாலும் எனது நடத்துநர் அப்படித்தான் டிக்கெட் கேட்பார் என காட்டமாக கூறியுள்ளார். அதற்கு  இளம் பெண் ஓட்டுநரான ஷர்மிளா எனது விளம்பரத்திற்காக யாரையும் நான் அழைக்கவில்லை. 

தற்போதும் கூட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வருவது குறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிறுவன மேலாளர் ரகு என்பரிடம் தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதற்கு ஆத்திரத்துடன் நிறுவன உரிமையாளர் துரைக்கன்னு உனது பெண்ணை கூட்டிட்டு வெளியே போ என கூறவே அங்கிருந்து வெளியேறியுள்ளார் ஷர்மிளா. 

தான் காலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 1200 ரூபாய் வருமானத்திற்காக இந்த பேருந்தை ஓட்டி வந்ததாகவும் இப்படி அவமதித்து வெளியேற்றுவார்கள் என நான் நினைத்து பார்க்கவில்லை என வேதனையுடன் கூறிய ஓட்டுநர் ஷர்மிளா ஓட்டுநரின் நிலையே இப்படித்தான் என்றும் என்னால் பேருந்து வாங்க முடியாது ஆனால் ஆட்டோ, கேப் போன்றவை வாங்க முடியும். அதனை வாங்கி ஓட்டி பிழைப்பு நடத்துவேன் என தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

click me!