
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் ஒன்றிய அமைச்சரும், மாநில அமைச்சரும் கலந்து கொண்டிருக்கின்ற விழாவில் மேடையில் எந்த அரசுப் பொறுப்பிலும், இல்லாத கோவை மாவட்ட பிஜேபி தலைவர் உத்தம ராமசாமி கலந்துகொண்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தந்தை பெரியார் திராவிட் கழக பொதுச்செயலளார் கோவை இராமகிருட்டிணன், அரசு விதிகள், பல்கலைக்கழக விதிகள் அனுமதிக்கின்றதா? அரசு விழாவில் ஒரு அரசியல் கட்சியின் விழாவாக மாற்றிய பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு உடனடியாக இந்தப் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு விழாவில் மேடையில் பிஜேபி தலைவரை அனுமதித்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தீக்குளித்த வேல்முருகன் பழங்குடியே அல்ல.. உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு அறிக்கை: திருப்பி அடித்த நீதிபதிகள்.
கோவை மாவட்ட பிஜேபி தலைவர் உத்தம ராமசாமி சமீபத்தில் அ. ராசாவை சர்ச்சைக்குரிய பேசிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த வாரம்தான் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.