காரமடையில் காயமடைந்த தேவாங்கை அரவணைத்த அதிரடிப்படையினர்

By Dinesh TG  |  First Published Oct 6, 2022, 9:44 PM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை வனப்பகுதியில் காயமடைந்த நிலையில் இருந்த தேவாங்கை அதிரடிப் படையினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டு பன்றி, காட்டெருமை உள்பட ஆபத்தான விலங்குகளும், மயில், மான், முயல், தேவாங்கு, குரங்கு உள்ளிட்ட பல்வேறு அரிய வகை உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன.

சில சமயங்களில் சிறுத்தை, யானை ஊருக்குள் புகுந்து  கால்நடைகளை தாக்கியும், விளைநிலங்களை சேதப்படுத்தியும் வருகிறது. மனித, விலங்கு மோதலும் ஏற்படுகிறது. மான், மயில் ஊருக்குள் புகும்போது நாய்கள் அதனை கடித்து காயப்படுத்தி விடும்.

Latest Videos

undefined

குன்றத்தூரில் தந்தை, மகன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை

அதனை பொதுமக்கள் மீட்டு சிகிச்சை அளித்து வனத்துறையிடம் ஒப்படைத்து வருகின்றனர். இந்த நிலையில் அத்திகடவு முகாமில் உள்ள சிறப்பு அதிரடி படையினர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு 4 வயது தேவாங்கு ஒன்று ஒரு கண் பார்வையற்று கையில் பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டியவாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறப்பு அதிரடி படையினர் தேவாங்கை மீட்டு தண்ணீர் கொடுத்து அரவணைத்தனர். உடனடியாக காரமடை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காரமடை வன அலுவலர் திவ்யா தலைமையிலான வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் தேவாங்கை ஒப்படைத்தனர்.

ராஜராஜ சோழன் இந்து மதமா? கமல் ஹாசன் சொன்ன பதில் இதுதான்!!

வனத்துறையினர் சிகிச்சைக்காக தேவாங்கை வெள்ளியங்காடு கால்நடை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தேவாங்கிற்கு சிகிச்சை அளித்து அதனை கண்காணித்து பராமரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கழுகு கொத்தி தேவாங்கு காயம் அடைந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். அல்லது அதனை யாராவது வேட்டையாடும் போது காயம் அடைந்து தப்பியதா? எனவும் வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

click me!