அழையா விருந்தாளியாக வீட்டிற்குள் நெழிந்த மலைப்பாம்பு; குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி

By Velmurugan s  |  First Published Jul 6, 2023, 11:51 AM IST

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே தோட்டத்து வீட்டிற்குள் நுழைந்த மலைப் பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.


கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ளது. வனப்பகுதியின் அருகாமையில் உள்ளதால் நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்து வருவது வழக்கம். இந்நிலையில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கெம்பனூரில் ஜெயராம் என்பவரது விவசாயி தோட்டத்து வீட்டுக்குள் மலைப்பாம்பு இருப்பதை கண்டறிந்தனர்.

Latest Videos

undefined

இதனை அடுத்து கோயமுத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவமாக பிடித்து கெம்பனூர் வனப் பகுதிக்குள் விட்டனர்.

அரசு பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் தலைமறைவு - போலீஸ் வலை வீச்சு

மேலும் இது போன்ற மலை பாம்புகளும், அரியவகை பாம்புகளும் குடியிருப்பு பகுதிக்குள் வந்தால் உடனடியாக வனத்துறை அல்லது தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், அவர்களாகவே பிடிக்க முயற்சி செய்யக் கூடாது. அது போல் விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்தாலும் அவர்களாகவே விரட்ட முற்படக்கூடாது. வனத்துறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக வந்து யானைகளை விரட்டும் பணியை மேற்கொள்வார்கள் என  வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூரில் போலீஸ் வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு; காவலருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
 

click me!