கோவை மாவட்டம் குனியமுத்தூரை அடுத்துள்ள சுகுணாபுரம் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தின் விடுதி அருகே காம்பவுண்ட் சுவர் ஒன்று உள்ளது.
கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் குனியமுத்தூரை அடுத்துள்ள சுகுணாபுரம் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தின் விடுதி அருகே காம்பவுண்ட் சுவர் ஒன்று உள்ளது. கருங்கல்லால் கட்டப்பட்ட இந்த சுவர் 30 அடி நீளமும், 5 அடி உயரமும் கொண்டது. இதன் அருகில் புதிய காம்பவுண்ட் சுவர் எழுப்ப திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. புதிய காம்பவுண்ட் சுவர் எழுப்ப பழைய கருங்கல் காம்பவுண்ட் சுவர் அருகில் குழி தோண்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட் இருக்கு பாருங்க..!
இந்த பணியில் ஆந்திராவை சேர்ந்த 3 தொழிலாளர்களும், மேற்கு வங்கத்தை சேர்ந்த 2 தொழிலாளிகள் என மொத்தம் 5 பேர் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக சுற்றுச்சுவர் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க;- மசாஜ் சென்டர் என்ற பெயரில் மஜாவாக நடந்த விபச்சாரம்! 14 பெண்கள்! 32 ஆண்கள்! உல்லாசம்?
மேலும் பரூன் கோஸ் என்பவர் படுகாயமடைந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரும் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த தொழிலாளர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.