கோவை மாவட்டம், சூலூர் அருகே பிரபல உணவகம் ஒன்றில் பிரியாணி சாப்பிட்ட பின்னர் வெள்ளை சாதம் கேட்ட ரைஸ் கேட்ட வாடிக்கையாளர் மற்றும் ஊழியர்கள் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர், நரசிம்ம மில் பகுதியில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சைவம், அசைவம் உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டுகின்றன, இந்நிலையில் நேற்று முன்தினம் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் தனது இரண்டு நண்பர்களுடன் அந்த உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளார். மூவரும் சென்ற நிலையில் ஒருவர் மட்டும் சைவ உணவு கேட்ட நிலையில் மற்ற இருவரும் ஒரு பிரியாணியை வாங்கி இரண்டு பேர் பங்கிட்டு சாப்பிட்டுள்ளனர். பிரியாணி சாப்பிட்ட பின்னர் தங்களுக்கு வெள்ளை சாதம் கொடுக்கும்படி கேட்டுள்ளனர்.
undefined
ஒரு பிரியாணியை வாங்கி இருவர் சாப்பிட்டுவிட்டு இருவரும் வெள்ளை சாதம் கேட்டதால் வழங்க முடியாது என்று உணவக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சிவில் பொறியாளருக்கும், உணவக ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
2 குழந்தைகளை தவிக்க விட்டு காதலனுடன் சென்ற பெண் 1 வாரத்திற்கு பின் மீட்பு
இதில் உணவக உரிமையாளர் மற்றும் உடன் வந்த மூன்று பேரும் ஆக்ரோஷமாக ஒருவுக்கொருவர் தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலானது. இதனை அடுத்து இரு தரப்பினரும் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த காவல் துறையினர் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்த நிலையில் தாங்கள் சமாதானமாக செல்வதாக கூறி இரு தரப்பினரும் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று வாபஸ் பெற்றனர்.
வாங்கும் பணத்திற்கு தரமான உணவு வழங்குங்கள்; பாரதியார் பல்கலை மாணவிகள் போராட்டம்