சத்தியமங்கலம் அருகே சாதி ஆணவப் படுகொலை: காதல் திருமணத்தை எதிர்த்து வெறிச்செயல்!

By SG Balan  |  First Published Mar 8, 2024, 12:02 AM IST

மரணமடைந்த ஹாசினியின் உடல் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, வியாழக்கிழமை மாலை சொந்த ஊரான எரங்காட்டூருக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அவர்களது உறவினர்களிடம் ஹாசினியின் உடல் ஒப்படைக்கப்பட்ட பின்னர், உடலை அடக்கம் செய்தனர். 


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த எரங்காட்டூர் கிராம், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் - மகேஸ்வரி ஆகியோரது மகன் சுபாஷ் (வயது 24). சத்தியமங்கலம் காந்திநகரைச் சேர்ந்த பிறபடுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விவசாயி சந்திரன் - சித்ரா ஆகியோரது மகள் மஞ்சு (வயது 21).

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த சுபாஷ் - மஞ்சு இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டனர். சுபாஷ் தனது மனைவி மஞ்சு மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். சுபாஷ் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வந்தார். மஞ்சு பார்மஸி படிப்பை முடித்து விட்டு, வேலைக்கு செல்லாமல், தனது கணவருடன் வீட்டில் வசித்து வந்தார். 

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில் சுபாஷ், கடந்த புதன்கிழமை காலை சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த தனது தங்கை ஹாசினியை (16)  பள்ளியில்  விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு எரங்காட்டூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்றுள்ளார்.

நடிகர் அஜித் குமார் மூளையில் அறுவைசிகிச்சை! அப்டேட் கொடுத்த அப்போலோ மருத்துவமனை!

சுபாஷ் மற்றும் தங்கை ஹாசினி இருவரும் எரங்காட்டூர் அருகே மேட்டுப்பாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது மஞ்சுவின் தந்தை சந்திரன் தனது பிக்கப் வேனில் அதிவேகமாக பின்தொடர்ந்து சென்று சுபாஷின் பைக் மீது மோதியுள்ளார். இதில் சுபாஷ், ஹாசினி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். 

சுபாஷ் மற்றும் ஹாசினி இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக கோவை கொண்டுசெல்லப்பட்ட ஹாசினி புதன்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சுபாஷின் உறவினர்கள், சந்திரனின் தோட்டத்திற்குள் புகுந்து அங்கு இருந்த வீடு, இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சொகுசு கார் ஆகியவற்றுக்கு தீ வைத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த ஹாசினியின் உடல் வியாழக்கிழமை மாலை சொந்த ஊரான எரங்காட்டூருக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட சுபாஷ் மஞ்சுவின் தந்தை சந்திரன் மற்றும் தாய் சித்ரா ஆகிய இருவர் மீதும் பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் சந்திரன் மற்றும் சித்ரா இருவரையும் போலீசார் வியாழக்கிழமை  இரவு கைது செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.

மகளிர் தலைமையில் த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை அணி! நிர்வாகிகளை அறிவித்த தலைவர் விஜய்!

click me!