யக்‌ஷா 2ஆம் நாள் விழா: மனதை மயக்கிய குமரேஷின் வயலின் இசை! சுஹாசினி, சுதா ரகுநாதன் பங்கேற்பு

By SG Balan  |  First Published Mar 6, 2024, 11:06 PM IST

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் யக்‌ஷா கலைத் திருவிழாவின், இரண்டாம் நாளான இன்று வித்வான் ஆர். குமரேஷ் குழுவினர் நிகழ்த்திய வயலின் இசை நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. 


சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா அறக்கட்டளை சார்பில் நடைபெறும் இசை விழாவின் 2ஆம் நாளில் வயலின் குமரேஷின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுஹாசினி மணிரத்னம், சுதா ரகுநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் யக்‌ஷா கலைத் திருவிழாவின், இரண்டாம் நாளான இன்று வித்வான் ஆர். குமரேஷ் குழுவினர் நிகழ்த்திய வயலின் இசை நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. 

Tap to resize

Latest Videos

பிரபல திரைப்பட நடிகையும் இயக்குனருமான திருமதி. சுஹாசினி மணிரத்னம் மற்றும் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரான சுதா ரகுநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். 

அவதூறு வழக்கில் சிக்கிய பாஜக பெண் நிர்வாகி சவுதாமணி பிணையில் விடுவிப்பு

திரு. குமரேஷ் அவர்கள் தனது 5 வயதில் வயலின் வாசிக்க தொடங்கினார். தமது 10 வயதிற்குள்ளாகவே 100 மேடைகளை கண்டு குழந்தை மேதையாக உருவெடுத்தார். இவருடைய 40 ஆண்டுகால இசை அனுபவத்தில் உலகின் பல்வேறு மேடைகளில் வயலின் இசைக் கச்சேரி நடத்தியுள்ளார். 

யக்‌ஷா இரண்டாம் நாள் விழாவில் இவர் தனது இனிமையான வயலின் இசையால் மக்களை மகிழ்வித்தார். அவருடன்  தனது பன்முகத் திறனுக்கு புகழ்பெற்றவரான வித்வான் ஸ்ரீ கே.யூ. ஜெயசந்திர ராவ் மிருதங்கம் வாசித்தார். இவரோடு  சேர்ந்து நவீன இசையையும் பாரம்பரிய இசையையும் செறிவுர கலந்து இசைக்கும் வித்வான் ஸ்ரீ பிரமத் கிரண் தபளா இசைத்தார். இந்நிகழ்ச்சியை தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டவர்களும் நேரில் கண்டு ரசித்தனர்.

யக்‌ஷா கலைத் திருவிழாவின் நிறைவு நாளான நாளை (மார்ச் 7) இந்தியாவின் முன்னனி நடன கலைஞரான 'பத்ம ஸ்ரீ' ஆனந்தா சங்கர ஜெயந்த் குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த கலை நிகழ்ச்சிகள் ஈஷாவில் உள்ள சூர்யகுண்டம் மண்டபம் முன்பாக தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.

நிறைவேறிய மோடியின் கேரண்டி! பெண்களின் வாழ்க்கையை மாற்றிய திட்டங்கள்!

click me!