கோவையில் கனமழை நீர் வீழ்ச்சி போல் காட்சியளித்த உக்கடம் மேம்பாலம்

By Velmurugan s  |  First Published Jun 2, 2023, 6:49 PM IST

கோவையின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சாலையை கடந்து சென்றன.


கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் இடையர்பாளையம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

Latest Videos

அதனைத் தொடர்ந்து பகல் நேரத்திற்கு பின்னர் தினமும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாநகரில் உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூர், ரயில் நிலையம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. 

தாம்பூல பையுடன் குவாட்டர் வழங்கிய நபருக்கு அபராதம் விதித்து கௌரவித்த அதிகாரிகள்

குறிப்பாக உக்கடம், கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் கருமேகங்கள் சூழந்ததால்  வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. அதே சமயம் உக்கடம், கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் பல்வேறு இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை மேம்பாலங்களுக்கு அடியில் நிறுத்திவிட்டு ஒதுங்கினர். அதே வேளையில் மேம்பாலங்களில்  இருந்து விழுந்த மழைநீர் தொடர் நீர் வீழ்ச்சிகள் போல் காட்சியளித்தது.

கன்னியாகுமரி விரைவு ரயிலை கவிழ்க்க சதி? திருச்சியில் நள்ளிரவில் பயங்கரம்

click me!