கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் கணுவாய் பன்னிமடை சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மழை நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
கோவை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்துள்ளது.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான, கணுவாய், தடாகம், சோமையனூர் பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், பொன்னுத்து அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் கணுவாய்- பன்னிமடை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மழை நீர் ஆர்ப்பரித்து வெள்ளம் போல் ஓடுகிறது. வழக்கத்தை விட நேற்று இரவு அதிக அளவு மழை பெய்த காரணத்தால் இந்த தரைப்பாலத்தில் அதிகளவு மழை நீர் ஓடுகிறது. இதனால் இங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Heavy Rain: கோவையில் இரவில் கொட்டி தீர்த்த கனமழை
இந்த வழி பொது பேருந்து போக்குவரத்துக்கானது இல்லை என்றாலும் தனிநபர் வாகனங்களில் கணுவாயில் இருந்து பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மழைநீர் வெள்ளம் போல் செல்வதால் பொதுமக்கள் பாலத்தை கடக்க முடியாமல் வேறு பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
கோவை தனியார் பண்ணையில் முறையாக பராமரிக்கப்படாத ஒட்டகம், குதிரை - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை