விமானத்தில் கல்வி சுற்றுலா… மகிழ்ச்சியில் ஆழ்ந்த அரசு பள்ளி மாணவர்கள்!!

By Narendran S  |  First Published Nov 21, 2022, 11:01 PM IST

கோவையை சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் 43 பேர் விமானத்தில் கல்வி சுற்றுலா சென்றதையடுத்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


கோவையை சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் 43 பேர் விமானத்தில் கல்வி சுற்றுலா சென்றதையடுத்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவையை அடுத்த கோட்டைபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் 39 பேர் மற்றும் சின்ன மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ மாணவிகள் நான்கு பேர் என 43 பேரை கோயமுத்தூர் ரோட்டரி மோனார்க்ஸ் சார்பில் மத்திய அரசின் உதான்  திட்டத்தின் கீழ் பெங்களூருக்கு மூன்று நாள் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: பஸ் கொண்டு பஸ் மீது மோதிய ஓட்டுனர்! பஸ் புறப்படும் நேர பிரச்சனையில் விபரீதம்!

Latest Videos

undefined

இதில் டபுள் டக்கர் ரயிலில் பெங்களூருக்கு சென்று அங்குள்ள அறிவியல் கண்காட்சி,உயிரியல் பூங்கா, நேஷனல் ஏரோநாட்டிக் லிமிடெட், உட்பட பெங்களூருவில் உள்ள பல்வேறு முக்கிய இடங்களை காண்பித்து விட்டு பெங்களூரில் இருந்து கோவைக்கு விமான மூலம் மாணவ மாணவிகளை அழைத்து வந்தனர். இதில் அவர்கள் ஆடல் பாடல் உடன் மகிழ்ச்சியாக தங்களது பொழுதை கழித்து கல்வி சம்பந்தமாகவும் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் அரசு கேபிள் முடங்கிய விவகாரம்... தனியார் நிறுவன எம்.டி. அதிரடி கைது

மேலும் மாணவ மாணவிகள் கூறுகையில், எங்களைப் போன்று வசதியற்ற மாணவ மாணவிகள் இதுபோன்று கல்வி சுற்றுலாவுக்கு சென்று மீண்டும் விமானத்தில் பயணிக்கும் போது எங்களது மனம் மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது என்று தெரிவித்தனர். மேலும் இதுபோன்று வசதியற்ற மாணவ மாணவியர்களுக்கு தொடர்ந்து உதவி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.  

click me!