சாலையில் தேங்காய் உடைக்கும் போராட்டம்; களத்தில் இறங்கிய பெண் விவசாயிகள் - போக்குவரத்து பாதிப்பு

By Velmurugan s  |  First Published Aug 24, 2023, 8:43 PM IST

கோவை மாவட்டம் சூலூர் அருகே விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை, திருப்பூர் மாவட்டங்களில், பல லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக தேங்காய்களுக்கும், கொப்பரைகளுக்கும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் இப்பிரச்சனைக்கு அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என பல்வேறு விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்த வருகின்றன. விலை வீழ்ச்சி பிரச்சினையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேங்காய் உடைப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக கோவை சூலூர் அடுத்த அருகம்பாளையம் பகுதியில் திரண்ட பெண் விவசாயிகள் சாலையில் தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேங்காய் குவியல்களில் பாமாயில் ஊற்றி தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் துறையினர் விவசாயிகளிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

வாய் பேசமுடியாத குழந்தை உள்பட 3 பேரை கொன்றுவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை; கடன் பிரச்சினையால் சிதைந்த குடும்பம்

இது குறித்து விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், சூலுார் கருமத்தம்பட்டி, உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்காய் கொள்முதல் விலை அதிகரிப்பு, நியாவிலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை, கள் இறக்க  அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்காய்கள் உடைக்கும் போராட்டத்தை நடத்தி உள்ளோம். அரசு தரப்பில் இதுவரை சாதகமான அறிவிப்பு வராததால், விரக்தி அடைந்துள்ளோம்.

செண்டை மேளம் முழங்க கதகளி நடமாடி ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய மாணவிகள்

மேலும் போராட்டத்தை தீவிர படுத்தும் வகையில், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், வரும், 25ம் தேதி போராட்டம் நடத்த உள்ளோம். தொடர்ந்து 30ம் தேதி வரை 8க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடக்க உள்ளது. 31ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த உள்ளோம். தீர்வு கிடைக்காத பட்சத்தில் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

click me!