“ஓரமா போங்க” ஹாரன் அடித்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் மூக்கை உடைத்த போதை ஆசாமிகள்

By Velmurugan s  |  First Published May 19, 2023, 7:18 PM IST

கோவையில் மது போதையில் சாலையை மறித்துக் கொண்டு நின்ற போதை ஆசாமிகளை வழிவிடச் சொல்லி ஒலி எழுப்பிய அரசுப் பேருந்து ஓட்டுநரின் மூக்கை உடைத்த நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை உக்கடம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட 94 BCD எண் கொண்ட பேருந்து டவுன்ஹாலில் இருந்து குப்போபாளையத்திற்கு இன்று மாலை 3 மணியளவில் புறப்பட்டது. பேருந்தை  ஓட்டுநர்  விஜயகுமார்( வயது 47), நடத்துநர் காலிங்கராஜ் (45) இயங்கி உள்ளார். பேருந்து கலிக்கநாயக்கன்பாளையம்  மதுபான கடை வலைவில் வந்து திரும்பி உள்ளது. 

அப்பொழுது சாலையின் குறுக்கே மூன்று வாலிபர்கள் நின்று உள்ளனர். பேருந்து செல்ல முடியாத நிலையில் ஓட்டுநர் ஒலி எழுப்பி உள்ளார். நடுரோட்டில் நின்று இருந்த போதை ஆசாமிகள் வாகனத்தை நிறுத்து நாங்கள் நிற்பது தெரியவில்லையா என்று தடித்த குரலில் பேசி ஓட்டுநரை பேருந்தில் இருந்து இறக்கி உள்ளனர். மதுகடைக்குள் இருந்து வெளியே வந்த போதை நண்பர்கள் ஓட்டுநர் விஜயகுமாரை கையில் அணிந்து இருந்த வலையத்தை கழற்றி வாய்‌, மூக்கு போன்ற இடங்களில் தகாத வார்த்தைகளை பேசிய படி பலமாக தாக்கியுள்ளனர். 

Latest Videos

undefined

திருச்சியில் அழகு நிலையம் என்ற பெயரில் விசாரம் நடத்திய 2 பேர் கைது; 2 பெண்கள் மீட்பு

ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ஓட்டுநரை பேருந்தில் இருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் தடுத்து போதை ஆசாமிகளை விரட்டினர். அடித்து விட்டு ஓடிய ஒருவரை மட்டும் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து பேருந்தில் ஏற்றி தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர்‌. ஓட்டுநர் விஜயகுமார் சிகிச்சைக்காக தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு; ஒரு பிரிவினர் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

பிடிபட்ட போதை ஆசாமியின் பெயர் சரண் என்பதும் அதே கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தப்பி ஓடியவர்களை பிடிக்க காவல் துறையினர் தேடித் வேட்டை நடத்தி வருகின்றனர். அவ்வழியே இயங்கிய மற்ற அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பேருந்தை நிறுத்தி விட்டு தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அதனால் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

click me!