கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம்! - அண்ணாமலை!

By Dinesh TG  |  First Published May 19, 2023, 12:33 PM IST

கள்ளச்சாராயத்தை கட்டத்துப்படுத்துதல் மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்குதல் உள்ளிட்ட இரு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியிடம் பாஜக குழு மனு அளிக்கும் என மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


கோவை ஈச்சனாரி பகுதியில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலையில் நடைபெறும் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பொறுப்பாளர் சிடி ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக சட்டமன்ற குழு தலைவர் நைனார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா, தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் வி.எல் சந்தோஷ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை நமீதா உட்பட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், கள்ளச்சாராய விற்பனையைக் கண்டித்து
நாளை காலை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.



சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தான் பங்கேற்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாளை மறுதினம் பாஜக குழுவினர் ஆளுநரை சந்தித்து மனு அளிக்க இருப்பதாகவும் அவர் கூறினார். அந்த மனுவில், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஒரு மனுவும் அளிக்கப்படுகிறது என அண்ணாமலை தெரிவித்தார்.

Latest Videos

click me!