ஜல்லிக்கட்டு தீர்ப்பின் வெற்றி 100% பாஜகவுக்கே சொந்தம் - ஹெச் ராஜா திட்டவட்டம்!

Published : May 19, 2023, 05:43 PM IST
ஜல்லிக்கட்டு தீர்ப்பின் வெற்றி 100% பாஜகவுக்கே சொந்தம் - ஹெச் ராஜா திட்டவட்டம்!

சுருக்கம்

ஜல்லிக்கட்டு தீர்ப்பின் மீதான வெற்றியை வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. முழுக்க முழுக்க 100% பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.  

கோவை ஈச்சனாரி பகுதியில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்ற செயற்குழு தீர்மானங்கள் தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசி அவர், மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி நிறைவடைந்து 10 வது ஆண்டு துவங்குகின்றது.

கோவிட் காலத்தில் நெருக்கடியில் இருந்தாலும் பொருளாதாத்தில் 5 வது இடத்தில் இருக்கின்றது. பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் முதல் இடத்தில் இந்தியா இருக்கின்றது. இதற்கு காரணமான மத்திய அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றபட்டு இருக்கின்றது.

ஜல்லிகட்டுக்கு யார் யாரோ கிரிட்டிட் எடுத்து கொள்கின்றனர். ஆனால் உண்மையில் காங் திமுக கூட்டணி ஆட்சியின் போது ஜல்லிகட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.

2017 ஜனவரியில் அரசை நாம் வழிநடத்தி, மாநிலத்தை அவசர தீர்மானம் நிறைவேற்ற சொல்லி, அப்போது முக்கிய அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து ஒரே நாளில் 4 அமைச்சங்களை பார்த்து அனுமதி கொடுக்கப்பட்டது

2017 முதல் நடத்தி கொண்டு இருக்கின்றோம். 2016 அரசாணைக்கு வாங்கிய தடை இப்போது நீங்கி இருக்கின்றது. ஜல்லிகட்டு மீண்டும் நடைபெற காரணமான நரேந்திரமோடிக்கு நன்றி பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றது. கேரளாவில் இருந்து கழிவுகள் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகின்றது. கேரளாவிற்கு ஏராளமான கனிம வளங்கள் கடத்தப்படுகின்றது.

தமிழகம் முழுக்க மதுக்கடைகள் திறக்கபட்டு இருக்கின்றது. கள்ள சாராயத்தால் 22 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுத்து இருக்கின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு காரணமாக மது இருக்கின்றது. மது விலக்கு கொண்டு வர பட வேண்டும்

கள்ள சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதை கண்டித்து நாளை மகளிரணி போராட்டம் நடத்தப்படும். மகளிரணி சார்ரபில் ஆளுநரை பார்த்து மனு அளிக்கவும் இருக்கின்றனர்.

நாளை ஆர்ப்பாட்டம் மகளிரணி சார்பில் நடந்தாலுல் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். ஓவ்வொரு ஆண்டும் மே மாதம் மக்களை சந்தித்து இருக்கின்றோம். அது போலதான் இந்த ஆண்டும் நடத்தப்படுகின்றதுமதுவிலக்கு மாநில அளவில் முடிவு செய்யபட வேண்டியது.

கள்ளசாரய மரணம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும். கள்ளசாரயம் கூடாது என்பதற்க்காக மதுக்கடைகள் கொண்டு வரப்பட்டது. அப்புறம் ஏன் கள்ள சாராயம் வருகின்றது.



ஜல்லிகட்டின் போது மாநில அரசை வழிநடத்தியது மத்திய அரசுதான். 100 சதவீத கிரிடிட் மத்திய அரசுக்குதான்

அப்போது முதல்வராக இருந்தவர் ஒ.பி.எஸ்... இதற்கு அதிமுக எடப்பாடி பழனிச்சாமி உரிமை கொண்டாடினால் தவறில்லை. திமுக ஸ்டாலின் உரிமை கொண்டாட முடியாது என எச்.ராஜா அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?