கோவையில் கார் உரிமையாளரை தாக்கிவிட்டு காரை கடத்தி சென்ற கும்பல் தாறுமாறாக ஓட்டி மக்கள் மீது மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் கார் உரிமையாளரை தாக்கிவிட்டு காரை கடத்தி சென்ற கும்பல் தாறுமாறாக ஓட்டி மக்கள் மீது மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கணபதி என்ற பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது காரை விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் கடந்த டிச.22 ஆம் தேதி விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த விளம்பரத்தை பார்த்து மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த இரண்டு பேர் காரை பார்த்துவிட்டு அதை ஓட்டி பார்க்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆரூருத்ரா தேர் திருவிழா… பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்!!
undefined
அதன்பேரில் கார் உரிமையாளர் வெங்கடேஷ் மற்றும் வாங்க வந்தவருடன் உடன் வந்தவரும் பின்னாள் அமர்ந்துக்கொண்டனர். வாங்க வந்த நபர் காரை ஓட்டிசென்றார். கோவை சக்தி சாலையில் உள்ள வணிக வளாகம் அருகே சென்ற போது திடீரென கூர்மையான ஆயுதம் வைத்து உரிமையாளரை குத்தி விட்டு பின்னர் கார் உரிமையாளாரான வெங்கடேஷை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு காரை திருடி சென்றுள்ளனர். இதை அடுத்து கீழே விழுந்த வெங்கடேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையும் படிங்க: தைரியம் இருந்தால் திமுக தனித்து நிற்கட்டும்… சவால் விடுத்த எஸ்.பி.வேலுமணி!!
அங்கு வெங்கடேஷுக்கு இரண்டு இடங்களில் தையல் போடப்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து அந்த வாலிபர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் போது கோவில்பாளையம் சந்தை பகுதியில் கார் தாறுமாறாக ஓட்டி ஐந்து பேர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது தெரியவந்தது. மேலும் இதுக்குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.