ஆந்திராவிலிருந்து கேரளாவிற்கு மீன் வண்டியில் கடத்திவரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை கலால் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கேரளாவுக்கு தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து அத்தியாவசியப் பொருட்கள் பல தினசரி அனுப்பபடுகின்றன. சரக்கு வாகனங்களில் எடுத்துவரப்படும் காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவை கோவை வழியாக கேரளா செல்கின்றன.
இந்நிலையில் வியாழக்கிழமை கலால் துறை அதிகாரிகள் கோவை, வாளையார் சோதனைச் சாவடியில் சந்தேகத்துக்குரிய வாகனங்களை சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலப் பதிவு எண் கொண்ட மீன் வண்டியை கலால் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
கோவையில் பிரமிப்பை ஏற்படுத்திய பழங்கால கார் மற்றும் பைக் கண்காட்சி!!
அப்போது, மீன் பெட்டிகளுக்கு நடுவே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்களைக் கண்டுபிடித்து, பிறமுதல் செய்துள்ளனர். கைப்பற்றிய கஞ்சா பொட்டலங்கள் சுமார் 200 கிலோ இருக்கும் என கலால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ள கும்பலைச் சேர்ந்த மற்றவர்களைக் காணிக்கவும் குழு அமைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.