இதய குறைபாடுகளுடன் கூடிய ஆறு நோயாளிகள்… முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை!!

By Narendran SFirst Published Mar 17, 2023, 11:48 PM IST
Highlights

கோவையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் இதயவியல் துறையில் 6 பேருக்கு பிறவி இதய குறைபாடுகளான இதய சுவர்களில் உள்ள ஓட்டைகள் அதி நவீன சிகிச்சை முறை மூலம் சரிசெய்யபட்டது. 

கோவையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் இதயவியல் துறையில் 6 பேருக்கு பிறவி இதய குறைபாடுகளான இதய சுவர்களில் உள்ள ஓட்டைகள் அதி நவீன சிகிச்சை முறை மூலம் சரிசெய்யபட்டது. இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 2.5 லட்சம் குடிந்தைகள் இதயக் குறைப்பாடு பிரச்சனையுடன் பிறக்கின்றனர். இந்த குழந்தைகளில் ஐந்தில் ஒருவர் கருமையான இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய இதய குறைபாடுகளை, தேசிய குழந்தை நலத்திட்டம் மூலம் முதற்கட்ட பரிசோதனையில் கண்டறிந்து, அவ்வாறு கண்டறியபட்ட இதய குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கபடுகிறது. இந்த நிலையில் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் இதயவியல் துறையில் 6 பேருக்கு பிறவி இதய குறைபாடுகளான இதய சுவர்களில் உள்ள ஓட்டைகள் அதி நவீன வடிகுழாய் சிகிச்சை முறை மூலம் சரிசெய்யபட்டது.

இதையும் படிங்க: பிரதமர் மித்ரா பூங்காவிற்கு தேர்வுசெய்யப்பட்டது தமிழகம்... பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்!!

இந்த நவீன சிகிச்சை மருத்துவர் முத்துக்குமரன், குழந்தை நல இருதயவியல் நிபுணர் மற்றும் துறை தலைவர், அப்போல்லோ குழந்தைகள் மருத்துவமனை, கோவை மருத்துவ கல்லூரி இருதவியல் துறை தலைவர் மற்றும் உதவி பேராசிரியர்கள் ஆகியோரால் நடத்தப்பட்டது. அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் Healing Tiny Hearts இனிஷியேட்டிவுடன் இணைந்து இந்த அதி நவீன வடி குழாய் சிகிச்சைகள் மேற்கொள்ளபட்டது. இதில் மூவருக்கு ASD (இதய மேலறை இடைத்துளை), ஒருவருக்கு VSD (இதய கீழறை பிரிசுவர்த்துளை), இருவருக்கு PDA (நிலைத்த நாளத் தமணி) குறைபாடுகள் அதி நவீன வடிகுழாய் (Device closure) முறையின் மூலம் சரிசெய்யபட்டது.

இதையும் படிங்க: வீடியோவில் சிக்கிய ஐயப்பன் ராமசாமி... மூஞ்சி முகரைய உடைப்பேன் என டிடிஎப் வாசன் ஆவேசம்!!

இதுக்குறித்து கோவை மருத்துவ கல்லூரியின் தலைவர் நிர்மலா கூறுகையில், இதயவியல் துறை குழு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே நடைமுறைகளைத் திட்டமிட்டிருந்தது 10 மிமி முதல் 30 மிமீ வரை மாறுபடும். அனைத்து நோயாளிகளின் இதயங்களிலும் உள்ள துளைகளின் அளவை சரிபார்த்து, அதை மூடுவதற்கு தனிப்பயனாக்கபட்ட சாதனங்களைச் பொருத்த வேண்டியிருந்தது. காலை 9 மணி முதல் மணி மாலை 3 மணி வரை நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் இந்த வடிகுழாய் சிகிச்சைக்கு 3 லட்சம் வரை செலவாகும் நிலையில் ஆறு நோயாளிகளுக்கும் முதல்வரின் உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது என்று தெரிவித்தார். 

click me!