கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காயத்துடன் சுற்றித் திரியும் காட்டு யானைக்கு கும்கி யானையின் உதவியுடன் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான வெள்ளியங்காடு பகுதியில் கடந்த ஒரு வாரமாக வாயில் காயத்துடன் சுற்றி வந்த பெண் யானைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி முதற்கட்ட சிகிச்சை தொடங்கியுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு மருத்துவர் சுகுமார் யானைக்கு மயக்க மருந்து கலந்த ஊசியை செலுத்தினர்.
கோவை மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காயம் பட்ட யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கும்கி உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். pic.twitter.com/DtRBl0AdtQ
— Asianetnews Tamil (@AsianetNewsTM)பின்னர் வனத்துறையினர் யானையின் கழுத்திலும் பின்னங்கால்களிலும் கயிறுகளை கட்டி யானையை நிறுத்தினர். இதற்கு உதவியாக கும்கி யானை சின்னத்தம்பி காட்டு யானையை பிடிக்க பயன்படுத்தப்பட்டது. மேலும் யானையை முதற்கட்டமாக சோதித்த மருத்துவர் சுகுமார் கூறுகையில், யானையின் நாக்கின் மையப் பகுதியில் வெட்டுக்காயம் உள்ளது. இதனால் கடந்த நான்கு வாரங்களாக உணவு சாப்பிட முடியாமல் யானை சுற்றி திரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.
பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா கோவையில் பறிமுதல்
மேலும் தற்போது யானைக்கு சிகிச்சை அளிப்பதே முதல் பணியாகவும் அதற்காக யானையின் ஆசனவாய் பகுதியில் 20 லிட்டர் தண்ணியை கொடுப்பதும் அதைத் தொடர்ந்து குளுக்கோஸ் அளிக்க இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மேல் சிகிச்சை தேவைப்பட்டால் யானையை கூண்டில் அடைத்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை முடிவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் வடமாநில தொழிலாளர் மர்மமான முறையில் மரணம்; காவல் துறையினர் விசாரணை
மேலும் யானையை பார்ப்பதற்கு ஊர் மக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அந்தப் பகுதி சற்று பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.